யாவது விடியற்காலம். 1எற்படுகாலையாவது ஆதித்தன் படுகிற பொழுது. நண்பகலாவது உச்சிப்பொழுது. கை என்பது ஒழுக்கம். (12) குறிஞ்சிக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் 13. அவற்றுள், கூதிர் யாமம் முன்பனி யென்றிவை ஓதிய குறிஞ்சிக் குரிய வாகும். (இ - ம்.) குறிஞ்சிக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பெரும்பொழுதும் சிறுபொழுதுமாகிய பதினொன்றனுள்ளும் கூதிரும் யாமமும் முன்பனியுமாகிய மூன்றும் மேற்சொல்லப்பட்ட குறிஞ்சிக்குரியவாம் என்றவாறு. இதனுட் பெரும்பொழுதாகிய முன்பனியைக் கூதிர் என்பதனோடு சேரக்கூறாது யாமமாகிய சிறுபொழுதின்பிற் கூறியது என்னையோவெனின், அது 2கூதிரின்றுணைச் சிறப்புடைத்து அன்மையின் அவ்வாறு கூறப்பட்டது எனக்கொள்க. வருகின்ற சூத்திரத்திற்கும் ஒக்கும். (13) மாலைக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் 14. வேனில் நண்பகல் பின்பனி யென்றிவை பான்மையி னுரிய பாலை தனக்கே. (இ - ம்.) பாலைக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பாலைக்கு வேனிலும் நண்பகலும் பின்பனியுமாகிய மூன்றும் விதியான் உரியவாம் என்றவாறு.
1. எற்பாடு என்பதற்கு 'நாள் வெயிற்காலை' (அஃதாவது, சூரியன் உதிக்குங் காலம்) என்று பொருள் கூறினர் சிவஞான முனிவர், தொல் முதற் சூத்திர விருத்தியில், அ. குமாரசாமிப் பிள்ளை அவர்களும், த. கனகசுந்தரம்பிள்ளை அவர்களும் தாங்கள் எழுதிய புத்துரையில் இப்பொருளே கொண்டனர். இளம் பூரணரும், நச்சினார்க்கினியரும் எற்பாடு என்பதற்குப் பிற்பகல் எனப் பொருள் கொண்டனர். அவர்கள் சிறுபொழுது ஆறென்பர். தொல், பொருள், அகத்திணையியல், 8-ஆம் சூத்திர உரையை நோக்குக. 2. கூதிரினளவு.
|