174

அலர் அறிவுறுத்தற்குச் செய்யுள்:

1"மணிவரை மாளிகை மாறை வரோதயன் வாணன்வெற்பா
பணிமொழி யாளென்னுங் கொள்கொம்பு மூடிப் படர்ந்தயலார்
அணிமனை தோறுங் கொழுந்துவிட் டம்ப லரும்பிமண்மேல்
தணிவில தாகவிப் போதலர் பூத்ததுன் றண்ணளியே."

எனவும்,

2"அறிந்தோ 3ரறனில ரென்றலர் சிறந்த
வின்னுயிர் கழியினு நனியின் னாதே
புன்னையங் கானற் புணர்குறி வாய்த்த
4பின்னீ ரோதியென் றோழிக் கன்னோ
படுமணி யானைப் பசும்பூட் சோழர்
கொடிநுடங்கு மறுகி னார்க்காட் டாங்கட்
கள்ளுடைத் தடவிற் புள்ளொலித் தோவாத்
தேர்வழங்கு தெருவி னன்ன
கௌவையா கின்ற தையநின் னருளே."

எனவும் வரும்.

தாயறிவுணர்த்தற்குச் செய்யுள்:

5"திரையிற் பவளம் வடவா முகத்தெழுந் தீக்கொழுந்தின்
கரையிற் படருங் கடற்றுறை நாட கயற்கொடிபொன்
வரையிற் றிகழ்வித்த வாணன்றென் மாறைச் மலர்ந்தமௌவல்
விரையிற் களவையெல் லாமறிந் தாளன்னை மெய்யுறவே."

எனவும்,

6"நாரை நல்லினங் கடுப்ப மகளிர்
நீர்வார் கூந்த லுளருந் துறைவ
பொங்குகழி நெய்த லுறைப்ப வித்துறைப்
பல்கால் வரூஉந் தேரெனச்
செல்லா தீமோ வென்றனள் யாயே."

எனவும் வரும்.

வெறி அச்சுறுத்தற்குச் செய்யுள்:

7"மையுற்ற நீலக்கண் மாமங்கை கோன்றஞ்சை வாணன்வெற்பி
னெய்யுற்ற வேலன்ப நீதணி யாமையி னெஞ்சினுள்ளே


1. த. கோ. செ : 229.

2. நற்றிணை : 227.

3. (பாடம்) 'அறிவிலர்'

4. (பாடம்) 'பின்னலோதி'

5. த. கோ. செ : 230.

6. ஐங்குறு நூறு, செ : 186.

7. த. கோ. செ : 231.