175

யையுற் றயர்வுற்றெம் மன்னையு மாயுமென் னாரணங்கின்
மெய்யுற்ற நோய்தணிப் பான்வெறி யாடல் விரும்பினரே."

என வரும்.

பிறர் வரைவுணர்த்தற்குச் செய்யுள்:

1"வெடிக்கின்ற விப்பியு ணித்திலம் பைத்தலை வெம்பகுவாய்த்
துடிக்கின்ற திங்களிற் றோன்றுந் துறைவசெஞ் சொற்புலவோர்
வடிக்கின்ற முத்தமிழ் வாணன்றென் மாறையெம் மான்மருங்கை
யொடிக்கின்ற கொங்கைகண் டாலெவர் நெஞ்சுரு காதவரே,"

எனவும்,

2"சிறுகட் பன்றிப் பெருஞ்சின வொருத்தலொடு
குறுக்கை யிரும்புலி பொரூஉ நாட
நனிநா ணுடைமையு மன்ற
பனிப்பயந் தனநீ நயந்தோள் கண்ணே."

எனவும் வரும்.

வரைவெதிர்வுணர்த்தற்குச் செய்யுள்:

3"குருதிகண் டாலன்ன காந்தளஞ் சாரற் குறிவெறிதே
வருதிகண் டாய்தஞ்சை வாணன்வெற் பாவெங்கண் மாநகர்நீ
சுருதிகண் டாரொடுந் தோன்றிலெங் கேளிர்நின் சொல்லிகவார்
பருதிகண் டான்மல ராதொழி யாகயப் பங்கயமே."

எனவும்,

'மாத்தோ லம்பி'

எனவும் வரும்.

வரையுநா ளுணர்த்தற்குச் செய்யுள்:

4"அலகம் பனகண் ணிவள்கொங்கை மென்சுணங் காகிவண்டு
பலகம் பலைசெய்யப் பூத்தன வேங்கை பனிவரைமேல்
திலகம் பதித்தெனச் சேல்வைத்த வாணன்றென் மாறை மன்னன்
உலகம் பயில்புகழ் போற்சிலம் பாமதி யூர்கொண்டதே."

எனவும்,

5"கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை
யூழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்த



1. த. கோ. செ : 232.

2. ஐங்குறு. செ : 266.

3. த. கோ. செ : 233.

4. த. கோ. செ : 234.

5. அகம். செ : 2.