176


சாரற் பலவின் சுளையொ டூழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியா துண்ட கடுவ னயலது
கறிவளர் சாந்த மேறல் செல்லாது
நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங்
குறியா வின்ப மெளிதி னின்மலைப்
பல்வேறு விலங்கு மெய்து நாட
குறித்த வின்பம் நினக்கெவ னரிய
வெறுத்த வேஎர் வேய்புரை பணைத்தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்
டிவளு மினைய ளாயிற் றந்தை
யருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக்
கங்குல் வருதலு முரியை பைம்புதல்
வேங்கையு மொள்ளிணர் விரிந்தன
நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே."

எனவும் வரும்.

தலைமகள் அறிவு தலைமகற்கு அறிவுறுத்தற்குச் செய்யுள்:

1"வனநாண் முளரி முகைவென்று வாணன்றென் மாறைவெற்பிற்
கனநா ணணிந்துபொற் கச்சற வீசிக் கதித்தெழுந்த
தனநாணு நுண்ணிடைத் தையனல் லாள்பழி சாற்றுவல்யா
னெனநாணி நின்பழி தான்மறைத் தாளன்ப வென்னையுமே"

எனவும்,

2"தன்னெவ்வங் கூறினு நீசெய்த வருளின்மை
யென்னையு மறைத்தாளென் றோழி யதுகேட்டு
நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூற றானாணி."

எனவும் வரும்.

குறிபெயர்த்திடுதற்குச் செய்யுள்:

3"ஊறோர் பலரிங் குலாவவுங் கூடும்வந் தொண்சிலம்பா
வேறோர் பொதும்பரிற் போய்விளை யாடுக வேற்படையான்
மாறோர் பகைவென்ற வாணன்றென் மாறையெம் மன்னுதவப்
பேறோர் வடிவுகொண் டாலன்ன நீயுமென் பேதையுமே."

எனவும்,



1. த. கோ. செ : 235.

2. கலி. குறிஞ்சி, செ : 8.

3. த. கோ. செ : 236.