177

1"விளையா டாயமொடு வெண்மண லழுத்தி
மறந்தனந் துறந்த காழ்முளை யகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென்
றன்னை கூறினள் புன்னையது சிறப்பே
யம்ம நாணுது நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலு மிலங்குநீர்த்
துறைகெழு கொண்கநீ நல்கின்
நிறைபடு நீழல் பிறவுமா ருளவே."

எனவும் வரும்.

குறிபெயர்த்திடுதற்கு மேற்காட்டிய செய்யுள் பகற்குறிக்கும் இரவுக்குறிக்கும் ஏற்குமாறறிந்து கொள்க.

பகல் வருவானை இரவு வருகென்றற்குச் செய்யுள்:

2"முத்தணி நீல மணித்தகட் டுள்ளெங்கு மொய்கொளவே
வைத்தணி சேர வகுத்தது போற்றஞ்சை வாணன்வையைப்
பைத்தணி வார்திரை தோய்கருந் தாட்புன்னைப்பாசிலைவெண்
தொத்தணி பூந்துறை வாவரு வாயிருள் 3தூங்கிரவே."

எனவும்,

4"பனைத்திர ளன்ன பரேரெறுழ்த் தடக்கைக்
கொலைச்சினந் தவிரா மதனுடை முன்பின்
வண்டுபடு கடாஅத் துயர்மருப் பியானை
தண்கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி
யுறுபலி யுரறக் குத்தி விறல்கடிந்து
சிறுதினைப் பெரும்புனம் வௌவு நாட
கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருதுகளம் பட்டெனக்
காணிய செல்லாக் கூகை நாணிக்
கடும்பகல் வழங்கா தாஅங் கிடும்பை
பெரிதா லம்ம விவட்கே யதனான்
மாலை வருதல் வேண்டுஞ் சோலை
முளைமேய் பெருங்களிறு வழங்கும்
மலைமுத லடுக்கத்த சிறுகல் லாறே."

எனவும் வரும்.



1. நற்றிணை, செ : 172.

2. த. கோ. செ : 237.

3. "தூங்கிடையே" என்பதும் பாடம்.

4. அகம். செ : 148.