இரவு வருவானைப் பகல் வருகென் றற்குச் செய்யுள்: 1"இழைவிளை யாடு மிளமுலை சாயற் கிடைந்தமஞ்ஞை கழைவிளை யாடுங் கடிப்புனங் காத்துங் கலையகலா துழைவிளை யாடு முயர்சிலம் பாவின்னு முன்பொருட்டாண் மழைவிளை யாடு மதிற்றஞ்சை வாணன் மலயத்திலே." எனவும், 2"நெடுமலை யடுக்கம் கண்கெட மின்னிப் படுமழை பொழிந்த பானாட் கங்குற் குஞ்சர நடுங்கத் தாக்கிக் கொடுவரிச் செங்க ணிரும்புலி குழுமுஞ் சாரல் வாரல் வாழிய ரைய நேரிறை நெடுமென் பணைத்தோ ளிவளும் யானுங் காவல் கண்ணினந் தினையே நாளை மந்தியு மறியா மரம்பயி லிறும்பின் ஒண்செங் காந்த ளவிழ்ந்த வாங்கண் தண்ப லருவித் தாழ்நீ ரொருசிறை உருமுச்சிவந் தெறிந்த உரனழி பாம்பின் திருமணி விளக்கிற் பெறுகுவை இருண்மென் கூந்த லேமுறு துயிலே." எனவும் வரும். பகலினும் இரவினும் பயின்றுவருகென்றற்குச் செய்யுள்: 3"குரவுங் கணியும் விரவும்வெற் பாவெய்ய குஞ்சரமேல் வரவுந் தியதெவ்வை மாற்றிய வாணன்றென் மாறைமின்னும் அரவும் பணியு நுடங்கிடை யாற்றல ளாற்பகலும் இரவுங் குறிவயி னீவரல் வேண்டு மிவள்பொருட்டே." என வரும். பகலினும் இரவினும் அகலிவண் என்றற்குச் செய்யுள்: 4"தாவாத செல்வந் தருந்தஞ்சை வாணன் றடஞ்சிலம்பா நீவாரல் சார னிலவல ராம்பக னீடிருளார் மாவா னிலவு நிலமங்கை வார்குழன் மல்லிகைபோல் ஓவா திரவெறிக் குஞ்சோலை நீழலி னூடுவந்தே." என வரும்.
1. த. கோ. செ : 238.
2. அகம். செ : 92. 3. த. கோ. செ : 239. 4. த. கோ. செ : 240.
|