தலைமகன் நாடும் ஊரும் குலனும் மரபும் புகழும் வாய்மையும் கூறற்குச் செய்யுள்: 1"தலத்திற்கு மாறைக்கு மன்னவன் வாணன் றமிழ்த்தஞ்சைசூழ் நிலத்திற்கு மாமணி யாகுநின் னாட்டிற்கு நின் பதிக்குங் குலத்திற்கு மாசில் குடிமைக்குஞ் சீர்மைக்குங் கோதின்மெய்ம்மை நலத்திற்கு மாவதன் றால்வரை யாது நடப்பதுவே." எனவும், 2"பிரைசங் கொளவீழ்ந்த தீந்தே னிறாஅன் மரையான் குழலி குளம்பிற் றுகைக்கும் வரையக நாட வரையா வரினெந் நிரைதொடி வாழ்த லிலள்." எனவும், 3"பழனக் கம்புள் பயிர்ப்பெடை யகவுங் கழனி யூரநின் மொழிவ லென்றுந் துஞ்சுமனை நெடுநகர் வருதி யஞ்சா யோவிவ டந்தைகை வேலே." எனவும், 4"தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம் அணங்கென அஞ்சுவர் சிறுகுடி யோரே," எனவும், 5"கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடிநெகிழ்ந்த தோளளாத் துறப்பாயான் மற்றுநின் குடிமைக்கீழ்ப் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ." எனவும், "திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருநலந் தோற்றாளை யிகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயான் மற்றுநின் புகழமைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ." எனவும் வரும். இவை நாடு முதலியனவற்றிற்குரிய சான்றோர் செய்யுளாம்.
1. த. கோ. செ : 241.
2. ஐந்திணை எழுபது, செ : 10. 3. ஐங்குறு. செ : 60. 4. கலி. குறிஞ்சி, செ : 16. 5. கலி. நெய்தல் : 18.
|