180

ஆறுபார்த் துற்ற அச்சங் கூறற்குச் செய்யுள்:

1"புராந்தகர் செஞ்சடை வெண்பிறை போனுதற் புள்ளிமிழ்பூங்
குராந்தொடை மென்குழற் கொம்பினை வேண்டிக் கொடி முல்லைநீண்
மராந்தழு வுந்தஞ்சை வாணன்வெற் பாவல்சி தேர்ந்திலஞ்சிக்
கராந்திரி கல்லதர் வாயெல்லி நீவரல் கற்பலவே."

எனவும்,

2"கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதிராயின்
அரையிருள் யாமத் தடுபுலியே றஞ்சி யகன்று போக
நரையுரு மேறுநுங் கைவே லஞ்சு நும்மை
வரையர மங்கையர் வௌவுத லஞ்சுதும் வாரலையே."

எனவும் வரும்.

ஆற்றாத் தன்மை யாற்றக் கூறற்குச் செய்யுள்:

3"கலங்குந் தெளியுங் கனலெழ மூச்செறி யுங்கண்கணீர்
மலங்கும் பொலந்தொடி சோரமெய் சோரு மறஞ்செய்கொலை
விலங்கும் படிறுசெய் யாக்குன்ற நாட விரைந்தளிப்பா
யலங்குங் கடும்பரித் தேர்வாணன் மாறை யணங்கினையே."

என வரும்.

காவன் மிகவுரைத்தற்குச் செய்யுள்:

4"நஞ்சா ரரவந் திரிதரு கானடு நாளிரவில்
அஞ்சாது செங்கை யயில்விளக் காவணங் கின்பொருட்டான்
மஞ்சார் மதிற்றஞ்சை வாணன்வெற் பாவரல் வன்சொலன்னை
துஞ்சாள் கடுந்துடிக் கைநகர் காவலர் துஞ்சினுமே."

என வரும்.

காம மிகவுரைத்தற்குச் செய்யுள்:

5"தென்னாக வண்டமிழ் வாணன்றென் மாறைச் செருந்தியுடன்
புன்னாக முங்கமழ் பூந்துறை வாசுரர் போற்றமிர்தம்
பின்னாக முன்வந்த பேதைதன் காமப் பெருங்கடற்கு
நின்னாக மன்றியண் டோபுணை யாவது நீந்துதற்கே."

எனவும்.



1. த. கோ. செ : 242.

2. யாப்பருங்கலக்காரிகை, செ : சூ:30. உரை மேற்கோள்.

3. த. கோ. செ : 243.

4. த. கோ. செ : 244.

5. த. கோ. செ : 245.