இவற்றுள், வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் முதலாகப் பிறர்வரைவுணர்த்தல்ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும் பொய்த்தற்குரிய; குறிபெயர்த்திடுதல் முதலாகப் பகலினும் இரவினும் அகலிவண் என்றல் ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும் மறுத்தற்குரிய; உரவோன் நாடும் ஊரும் குலமும் மரபும் புகழும் வாய்மையும் கூறலாகிய ஒன்று கழறற்குரியது; வரைவெதிர்வுணர்த்தலும், வரையுநாளுணர்த்லும், அறிவறிவுறுத்தலும், ஆறுபார்த்துற்ற அச்சங்கூறலும், ஆற்றாத்தன்மை ஆற்றக்கூறலும், காவல் மிகவுரைத்தலும், காமம்மிகவுரைத்தலும், கனவு நலிபுரைத்தலும், கவினழிபுரைத்தலுமாகிய ஒன்பதும் மெய்த்தற்குரிய. (50)
16. ஒருவழித்தணத்தல் ஒருவழித்தணத்தலின் வகை 167. செலவறி வுறுத்தல் செலவுடன் படாமை செலவுடன் படுத்தல் செலவுடன் படுதல் சென்றுழிக் கலங்கல் தேற்றியாற்று வித்தல் வந்துழி நொந்துரை யென்றெழு வகைத்தே ஒன்றக் கூறிய ஒருவழித் தணத்தல். (இ - ள்.) செலவறிவுறுத்தல் முதலாக வந்துழிநோதல் ஈறாக எழுவகையினையுடைத்து மேற்சொல்லிய ஒருவழித்தணத்தல் என்றவாறு. (51)
ஒருவழித்தணத்தலின் விரி 168. தன்பதிக் ககற்சி தலைவன் சாற்றலும் மென்சொற் பாங்கி விலக்கலும் தலைவன் நீங்கல் வேண்டலும் பாங்கி விடுத்தலும் தலைவிக் கவன்செல வுணர்த்தலும் தலைவி நெஞ்சொடு புலத்தலும் சென்றோன் நீடலிற் காமம் மிக்க கழிபடர் கிளவியுங் கோற்றொடிப் பாங்கி ஆற்றுவித் தலுமவன் வந்தமை உணர்த்தலும் வந்தோன் றன்னொடு நொந்து வினாதலும் வெந்திறல் வேலோன் பாங்கியொடு நொந்து வினாதலும் பாங்கி
|