20

1வேரல் ஐவனந் தோரை யேனல்
கறங்கிசைத் தொண்டகங் குறிஞ்சியாழ் குறிஞ்சி
வெறிகோள் ஐவனம் வித்தல் செறிகுரற்
பைந்தினை காத்தல் செந்தேன் அழித்தல்
செழுங்கிழங் ககழ்தல் முழங்கிவீ ழருவியொடு
கொழுஞ்சுனை யாடல் குறிஞ்சிக் கருப்பொருளே.

(இ - ம்.) குறிஞ்சிக்குரிய கருப்பொருள் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) சேய் முதலாகச் சுனையாடல் ஈறாகச் சொல்லப்பட்டனவெல்லாங் குறிஞ்சிக் கருப்பொருளாம் என்றவாறு.

(20)

பாலையின் கருப்பொருள்

21. கன்னி விடலை காளை மீளி
இன்னகை எயிற்றி எயினர் எயிற்றியர்
மறவர் மறத்தியர் புறவுபருந் தெருவை
கழுகு செந்நாய் கல்கெழு குறும்பு
குழிவறுங் கூவல் குராஅ மராஅ
உழிஞ்சில் பாலை யோமை யிருப்பை
வழங்குகதிக் கொண்டன செழும்பதிக் கவர்ந்தன
பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம்
பகற்சூறை யாடல் பாலைக்கருப் பொருளே.

(இ - ம்.) பாலைக்குரிய கருப்பொருள் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) கன்னி முதலாகச் சூறையாடல் ஈறாகச் சொல்லப்பட்டன வெல்லாம் பாலைக் கருப்பொருளாம் என்றவாறு.

(21)


1. மூங்கில் புல்லின மன்றோ அதனை மரங்களோடு சேர்த்துக் கூறியது என்னெனின்; குறிஞ்சியினன்றி வேறு நிலத்திற் புல்லினங் கூறப்படாமையின் கருப்பொருள் கூறும் பொதுச் சூத்திரத்துக் கருப்பொருள்களின் எண் பதினான்கெனக் கூறினார்; மூங்கில் புல்லினத்தைச் சேர்ந்ததேனும் அதனை வேறு கூறாமல் அவ்வெண்ணுக்கேற்ப மரங்களோடு சேர்த்துக் கூறினர் என்க.