முல்லையின் கருப்பொருள் 22. நெடுமால் குறும்பொறை நாடன் றோன்றல் 1வடுவில் கற்பின் மனைவி கிழத்தி இடையர் இடைச்சியர் ஆயர் ஆய்ச்சியர் கான வாரண மான்முயல் பாடி குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை நிறங்கிளர் தோன்றி பிறங்கலர்ப் பிடவம் கொன்றை காயா மன்றலங் குருந்தந் தாற்றுக்கதிர் வரகொடு சாமை முதிரை ஏற்றுப்பறை முல்லை யாழ்சா தாரி சாமை வரகு2 தரமுடன் வித்தல் அவைகளை கட்டல் அரிதல் கடாவிடல் செவிகவர் கொன்றைத் தீங்குழல் ஊதல் மூவின மேய்த்தல் சேவினந் தழுவல் கழுமிய குரவையொடு கான்யா றென்றிவை முழுதுட னாடன் முல்லைக்கருப் பொருளே. (இ - ம்.) நெடுமால் முதலாகக் கான்யாறாடல் ஈறாகச் சொல்லப்பட்டனவெல்லாம் முல்லைக் கருப்பொருளாம் என்றவாறு. (22) மருதத்தின் கருப்பொருள் 23. இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன் கெழுதகு கற்பின் கிழத்தி மனைவி உழவர் உழத்தியர் கடையர் கடைச்சியர் மழலை வண்டான மகன்றில் நாரை அன்னம் போதா நன்னிறக் கம்புள் குருகு தாரா எருமை நீர்நாய்
(பாடம்) 1. 'மடியில் கற்பின்' 2. 'தாமுடன் வித்தல்.'
|