பெருகிய சிறப்பின் பேரூர் மூதூர் யாறு மனைக்கிண றிலஞ்சி தாமரை நாறிதழ்க் கழுநீர் நறுமலர்க் குவளை காஞ்சி வஞ்சி பூஞ்சினை மருதஞ் செந்நெல் வெண்ணெல் அந்நெல் லரிகிணை மன்றன் முழவ மருதயாழ் மருதம் மன்றணி விழாக்கோள் வயற்களை கட்டல் அரிதல் கடாவிடல் அகன்குளம் குடைதல் வருபுன லாடன் மருதக்கருப் பொருளே. (இ - ம்.) மருதத்திற்குரிய கருப்பொருள் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இந்திரன் முதலாக வருபுனலாடல் ஈறாகச் சொல்லப்பட்டன வெல்லாம் மருதக் கருப்பொருளாம் என்றவாறு. (23) நெய்தலின் கருப்பொருள் 24. வருணன் சேர்ப்பன் விரிதிரைப் புலம்பன் பரும அல்குற் பரத்தி நுளைச்சி நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர் அளவர் அளத்தியர் அலைகடற் காக்கை சுறவம் பாக்கம் பெறலரும் பட்டினம் உவர்நீர்க் கேணி கவர்நீர் நெய்தல் கண்டகக் கைதை முண்டகம் அடம்பு கண்டல் புன்னை வண்டிமிர் ஞாழல் புலவ மீனுப்பு விலைகளிற் பெற்றன நளிமீன் கோட்பறை நாவாய்ப் பம்பை விளரியாழ் செவ்வழி மீனுப்புப் படுத்தல் உணங்கவை விற்றன்மீன் உணக்கல்புள் ளோப்பல் நெடுங்கட லாடல் நெய்தற்கருப் பொருளே. (இ - ம்.) நெய்தற்குரிய கருப்பொருள் உணர்த்துதல் நுதலிற்று.
|