255

தெள்ளாது வந்துன் கடையினின் றார்நம் மிறைவர்குற்றங்
கொள்ளா தெதிர்கொள்வ தேகுண மாவது கோமளமே."

என வரும்.

தலைவனைத் தலைவி எதிர்கொண்டு பணிதற்குச் செய்யுள் :

1"மருவிற் பெருநல மன்னுவ தாந்தஞ்சை வாணன்வெற்பர்
ஒருவிற் பசலை யுருக்குவ தாநமக் கூடலெவ்வாறு
இருவிற் புருவ விளங்கொடி யேயெய்து மெய்தலில்லாத்
திருவிற் புனைநறுந் தார்வரை மார்பர் திருமுனின்றே."

என வரும்.

புணர்ச்சியின் மகிழ்தற்குச் செய்யுள் :

2"மன்னவர் காம நெடுங்கடல் வாணன்றென் மாறையன்னான்
தொன்னலம் வார்முலை மத்தந் தழீஇத்தடந் தோளிணையாம்
பன்னக நாணிற் கடைந்திதழ் வார்திரைப் பட்டநன்னீர்
இன்னமிழ் தார்ந்திமை யோரமை யாவின்ப மெய்தினரே."

என வரும்.

(6)

உணர்த்த உணரா ஊடற்குரிய கிளவிகள்

206. வெள்ளணி யணிந்து விடுத்துழிப் புள்ளணி
3மலைவேல் அண்ணல் வாயில் வேண்டலும்
தலைவிநெய் யாடிய திகுளை சாற்றலும்
தலைவன் தன்மனத் துவகை 4கூறலும்
தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றலும்
தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தலும்
பாணன் முதலாப் 5பாங்கன் ஈறாப்
பேணிய வாயில்கள் பெரியோன் விடுத்துழி
மறுத்தலும் விருந்தொடு வந்துழிப் பொறுத்தல்கண்
டிறையோன் மகிழ்தலும் இறைமகள் விருந்துகண்
டொளித்த வூடல் 6வெளிப்பட நோக்கிச்


1. த. கோ. செ : 386.

2. த. கோ. செ : 387.

3. 'மாலை'.

(பாடம்) 4. 'கூர்தலும்'.

5. 'பாங்கி ஈறா.'

6. 'வெளிப்படல் நோக்கி'