256

சீறே லென்றவள் சீறடி தொழலும்இஃ
தெங்கையர் காணின் நன்றன் றென்றலும்
அங்கவர் யாரையும் அறியே னென்றலும்
காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தலும்
தாமக் குழலியைப் பாங்கி தணித்தலும்
தணியா ளாகத் தலைமகன் ஊடலும்
அணிவளைப் பாங்கி அன்பிலை கொடியையென்
றிணர்த்தார் மார்பனை யிகழ்தலும் பிறவும்
உணர்த்த உணரா ஊடற் குரிய.

(இ - ம்.) உணர்த்த உணரா ஊடற்குரிய கிளவிகளை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) வெள்ளணியணிந்து விடுத்துழித் தலைவன் வாயில் வேண்டல் முதலாகப் பாங்கி தலைவனை அன்பிலை கொடியையென்றிகழ்தல் ஈறாகச் சொல்லப்பட்டனவும், பிறவும் உணர்த்த உணரா ஊடற்குரியவாம் என்றவாறு.

அவற்றுள்,

வெள்ளணியணிந்து விடுத்துழிப் புள்ளணி மலைவேல்
அண்ணல் வாயில் வேண்டற்குச் செய்யுள் :

1"என்பாற் குறையை நினைந்து மறாதெதிர் கொள்ளவல்லே
தன்பாற் புலவி தணிசென்று நீதஞ்சை வாணன்வைய
மன்பாற் பரவும் புகழுடை யானரு ளேயனையா
யுன்பாற் புலவி யுறாள்வண்ண வார்குழ லொண்ணுதலே."

என வரும்.

தலைவி நெய்யாடியது இகுளை சாற்றற்குச் செய்யுள் :

2"மலர்புரை யேர்கொண்ட வாட்கணெங் கோமங்கை வாணன்றஞ்சைப்
பலர்புகழ் பாலற் பயந்துசெய் யாடினள் பாங்கெவர்க்கு
மலர்புரை நீடொளி யாடியுட் பாவையன் னாட்குளநீர்
புலர்புன லூரவென் னோதிரு வுள்ளமிப் போதுனக்கே."

எனவும்,


1. த. கோ. செ : 388.

2. த. கோ. செ : 389.