1"குவளை மேய்ந்த குறுந்தா ளெருமை குடநிறை தீம்பால் படூஉம் ஊர புதல்வனை யீன்றிவள் நெய்யா டினளே." எனவும் வரும். தலைவன் தன்மனத்துவகை கூறற்குச் செய்யுள்: 2"மையணி வேல்விழி வாணுதல் கூர்ந்தது வாணன்றஞ்சைக் கொய்யணி நாண்மலர்க் கொம்பரன் னாள்குழ விப்பயந்து நெய்யணி மேனியி லையவி பூண்ட நிலையறிந்தே கையணி வால்வளை யைக்கண்ட நாளினுங் காதன்மையே." என வரும். தலைவிக்கு அவன்வரல் பாங்கி சாற்றற்குச் செய்யுள் : 3"ஏரார் புதல்வன் பிறந்தனன் வாழிய வென்னுமுன்னே வாரார் வளமனை வந்துநின் றார்கங்குல் வாணன்றஞ்சை நீராவி நீல நெடுங்கண்மின் னேநின்னை நீப்பதல்லால் தேரா தொழிகுவ ரோபெரி யோர்தஞ் சிறுவனையே." எனவும், 4"நெஞ்நர் வொண்மணி கடிமனை யிரட்டக் குறையிலைப் டோதிய விரவுமணற் பந்தர்ப் பெரும்பாண காவல் பூண்டென வொருசார்த் திருந்திழை மகளா விரிச்சி நிற்ப வெற்புற விரிந்த அறுவை மெல்லணைப் புனிறுநாறு செவிலியொடு புதல்வன் றுஞ்ச வையவி யணிந்த நெய்யாட் டீரணிப் பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை யீரிமை பொருந்த நள்ளென் கங்குற் கள்வன்போல வகன்றுறை யூரனும் வந்தனன் சிறந்தோன் பெயரண் பிறந்த மாறே." எனவும் வரும். இது, முன்னிலைப் புறமொழி. தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தற்குச் செய்யுள் : 5"வயங்கே ழுலகும் புரக்கின்ற வாணன்றென் மாறையன்ன நயங்கேழ் பெருவள நல்குநல் லூர நயந்துநண்ணி
1. தொல், பொருள், கற்பியல் : 5 ஆம் சூ. உரை மேற்கோள்.
2. த. கோ. செ : 390. 3. த. கோ. செ : 391. 4. நற்றிணை, செ : 40. 5. த. கோ. செ : 392.
|