முயங்கேல் சிறுவற் பயந்தவென் மேனியின் முத்துவடந் தயங்கே ரகமுழு தும்பழு தாமது தானினக்கே." எனவும், 1"கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல் சுரும்புபசி களையும் பெரும்புன லூர புதல்வனை யீன்றவெம் மேனி முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே." எனவும் வரும். பாணன் முதலாகப் 2பாங்கன் ஈறாகப் பேணிய வாயில்கள் பெரியோன் விடுத்துழித் தலைமகள் பாணனை மறுத்தற்குச் செய்யுள் : 3"தலையா கியதன்மை யூரற்கு வாணன் றமிழ்த்தஞ்சைசூழ் மலையா கியமதில் வையைநன் னாட்டெங்கை மான்படுக்குங் கலையாகு நின்னிசைக் கண்ணிகொண் டேஎதிர் கன்றுதின்னிப் புலையா கடக்கவெம் மிற்போக போக புறங்கடையே." எனவும், 4"புலைமக னாதலிற் பொய்ந்நின் வாய்மொழி நில்லல் பாண செல்லினிப் பரியல் பகலெஞ் சேரி காணி னகல்வய லூர னாணவும் பெறுமே." எனவும் வரும். வாயில் மறுக்கப்பட்ட பாணன் கூறற்குச் செய்யுள் : 5"நினக்கே தகுநின் னெடும்புன லூரனு நீயுமவன் தனக்கே தகுவை தமிழ்த்தஞ்சை வாணன் றடங்கிரிசூழ் புனக்கே கயமன்ன நின்னடி போற்றிப் புகன்றுகன்றும் எனக்கே தகுமிகை யாலெம்பி ராட்டி யெறிந்தகல்லே." என வரும். தலைமகள் விறலிவாயின் மறுத்தற்குச் செய்யுள் : 6"வண்புன லூர்வையை சூழ்தஞ்சை வாணனை வாழ்த்தலர்போற் கண்புன லூருமென் காதல்கண் டேநின் கடைத்தலைக்கே
1. ஐங்குறு. செ : 65.
2. (பாடம்) பாங்கி ஈறாக. 3. த. கோ. செ : 393. 4. தொல், பொருள், கற்பியல், 9ஆம் சூ. உரை மேற்கோள். 5. த. கோ. செ : 394. 6. த. கோ. செ : 395.
|