தலைமகள் விருந்துகண்டொளித்த ஊடல் பள்ளியிடத்து வெளிப்படத் தலைமகன் சீறேல் என்றவள் சீறடிதொழற்குச் செய்யுள் : 1"தெரியோர் பொருட்டன்று தேர்வின்றி யூடல் செயிர்த்தவர்க்குக் கரியோர் தெளித்தென்ன காரணங் காட்டுவர் கானுண்டுதேன் வரியோர் தொடைப்பயன் வாணன்றென் மாறை மலர்த்திருவே பெரியோர் பொறுப்பரன் றேசிறி யோர்கள் பிழைத்தனவே." என வரும். இஃதெங்கையர் காணின் நன்றன்றென்றற்குச் செய்யுள்: 2"எண்போன நெஞ்சமு நீருமென் பாதமிறைஞ்சுதல் நுங் கண்போலு மெங்கையர் காணினன் றோகயன் மாதிரத்துத் திண்போ தகந்தொறுந் தீட்டிய வாணன் செழுந்தஞ்சைசூழ் வண்போ தளவிய நீர்வையை நாட்டுறை மன்னவரே." என வரும். அங்கவர் யாரையும் அறியேன் என்றற்குச் செய்யுள்: 3"பாவைநீ புலவியி னீடல் பாவியேற்கு ஆவியொன் றிரண்டுடம் பல்ல தூற்றுநீர்க் கூவல்வாய் வெண்மணல் குறுகச் செல்லுமே மேவிப்பூங் கங்கையுள் விழைந்த வன்னமே." என வரும். தலைமகள் காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தற்குச் செய்யுள் : 4"போயே தெருவிற் றனிவிளையாடும் புதல்வற்புல்ல நீயே திலையல்லை நின்மக னேயிவ னீயுமவன் தாயே வருகெனச் சேயன்ன வாணன் றமிழ்த்தஞ்சைமான் ஏயே யெனநிற்ற லானறிந் தேன்தன்னை யங்கையென்றே." எனவும், 5"நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதின் அல்லி யயலிதழ் புரையும் மாசில் அங்கை மணிமருள் அவ்வாய் நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்
1. த. கோ. செ : 397.
2. த. கோ. செ : 398. 3. சீவகசிந்தா. குணமாலை. செ : 167. 4. த. கோ. செ : 400. 5. அகம். செ : 16.
|