யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் தேர்வழங்கு தெருவிற் றமியோற் கண்டே கூரெயிற் றரிவை குறுகினள் யாவரும் காணுந ரின்மையிற் செத்தனள் பேணிப் பொலங்கலஞ் சுமந்த பூண்டாங் கிளமுலை வருக மாளஎன் னுயிரெனப் பெரிதுவந்து கொண்டன ணின்றோட் கண்டுநிலைச் செல்லேன் மாசில் குறுமக ளெவன்பே துற்றனை நீயுந் தாயை யிவற்கென யான்தன் கரைய வந்து விரைவனென் கவைஇக் களவுடம் படுநரில் கவிழ்ந்து நிலங்கிளையா நாணி நின்றோள் நிலைகண் டியானும் பேணினெ னல்லனோ மகிழ்ந வானத் தணங்கருங் கடவு ளன்னோள்நின் மகன்தா யாதல் புரைவதாங் கெனவே." எனவும் வரும். தலைமகளைப் பாங்கி புலவி தணித்தற்குச் செய்யுள் : 1"மாவா ரணமன்ன வாணன்றென் மாறைநம் மன்னர்நின்னைப் பாவாய் பணியவும் பார்க்கிலை நீயிடப் பாகமங்கை தாவாத சங்கரன் கங்கைதன் கொங்கை தழீஇயிதழிப் பூவார் சடைமுடி மேல்வைத்த போதும் பொறுத்தனளே." எனவும், 2"உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றால் நீள விடல்." எனவும் வரும். தலைமகள் புலவி தணியாளாகத் தலைமகன் ஊடற்குச் செய்யுள் : 3"தழங்கார் புனல்வையை சூழ்தஞ்சை வாணன் றனதருள்போற் பழங்காத லெண்ணலென் பைதனெஞ் சேயிவள் பண்டுபைம்பொற் கழங்கா டிடமுங் கடிமலர்க் காவுங் கடந்து புள்ளும் வழங்கா வழிநமக் கோர்துணை யாய்வந்த மானல்லளே." எனவும்,
1. த. கோ. செ : 401.
2. திருக்குறள், செ : 1302. 3. த. கோ. செ : 402.
|