1"எவ்வி யிழந்த 2வறுமையர் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென்று இனைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுரு மௌவ னாறும் பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே." எனவும் வரும். பாங்கி அன்பிலை கொடியை என்று இணர்த்தார் மார்பனை இகழ்தற்குச் செய்யுள் : 3"மைந்நாண் மலர்த்தொடை வாணன்றென் மாறையெம் மன்னருவந் தந்நாண் முயங்கி யமிழ்தென வார்ந்தனி ரார்வமுற்று முந்நாண் மதிவட்ட மென்முலை மாதை முனிந்துநஞ்சென் றிந்நாண் மிகவுவர்த் தீர்புல வாநிற்றி ரெங்களையே." எனவும், 4"வேம்பின் பைங்கா யென்றோழி தரினே தேம்பூங் கட்டி யென்றனி ரினியே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கட் டண்ணிய தரினும் அதுவே, வெய்ய வுவர்க்கு மென்றனிர் ஐய வற்றா லன்பின் பாலே." (7) எனவும் வரும். இதுவும் அது 207. ஆயிழை மைந்தனும் ஆற்றா மையுமே வாயி லாக வரவெதிர் கோடலும் மணந்தவன் போயபின் வந்த பாங்கியோ டிணங்கிய மைந்தனை யினிதிற் புகழ்தலும் தலைவனைப் புகழ்தலும் சிலைநுதற் பாங்கி மனைவியைப் புகழ்தலும் இனையவை பிறவும் அனைவகை மொழிந்த அதன்பாற் படுமே. இதுவும் அது.
1. தொல், பொருள், கற்பியல் : 5 ஆம் சூ. : உரை மேற்கோள்.
2. (பாடம்) 'வறுமையாழ்ப் பாணர்.' 3. த. கோ. செ : 403. 4. குறு. செ : 196.
|