263

(இ - ள்.) ஆயிழை மைந்தனும் ஆற்றாமையும் வாயிலாகத் தலைமகன் வந்துழித் தலைமகள் எதிர்கோடல் முதலாகப் பாங்கி மனைவியைப் புகழ்தல் ஈறாகச் சொல்லப்பட்டனவும், பிறவும் அத்தன்மைத்தாகிய உணர்த்த ஊணரா ஊடற்குரியவாம் என்றவாறு.

இவை வேறுகூறியது அவைபோல ஊடற்சிறப்பின்மை நோக்கி என்க.

அவற்றுள், மகனும் ஆற்றாமையும் வாயிலாகத் தலைமகன் வந்துழித் தலைமகள் எதிர்கோடற்குச் செய்யுள்:

1"வெள்ளம் பரந்தன்ன வேட்கையென் றாலு மிகப்பெரியோர்
உள்ளஞ் சிறியவர் மேற்செல்வ ரோவொளிர் கோமளஞ்செய்
வள்ளங் கமல மலர்த் தஞ்சை வாணன்றென் மாறையன்னப்
புள்ளம் புனல்வய லூரபுன் காமம் புகல்வதன்றே."

எனவும்,

2"வெண்ணுதற் கம்பு ளரிக்குரற் பேடை
தண்ணறும் பழனத்துக் கிளையோ டாலு
மறிவில் யாணர் மலிகே ழூரநீ
சிறுவரி னினைய செய்தி
நகாரோ பெருமநிற் கண்டிசி னோரே."

எனவும் வரும்.

தலைமகனைப் புணர்ந்து நீங்கியபின் வந்த பாங்கியொடு தன்மகனைப் புகழ்தற்குச் செய்யுள்:

3"இருமையி லேயும் பயன்களெல் லாந்தன்னை யீன்றநமக்
கொருமையி லேவந் துறத்தகைந் தான்மைந்த னொண்சுடர்போல்
வருமயி லேகொண்டு மாதடிந் தானன்ன வாணன்றஞ்சைத்
திருமயி லேயனை யாய்புன லூரனைத் தேருடனே."

எனவும்,

4"இம்மை யுலகத் திசையொடும் விளங்கி
மறுமை யுலகமு மறுவின் றெய்துப
செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப்
பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம்
வாயே யாகுதல் வாய்த்தனைம் தோழி



1. த. கோ. செ : 404.

2. ஐங்குறு. செ : 85.

3. த. கோ. செ :405.

4. அகம். செ : 66.