264

நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை யயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற வணியன் இத்தெரு விறப்போன்
மாண்டொழின் மாமணி கறங்கக் கடைகழிந்து
காண்டல் விருப்பொடு தளர்புதளர் போடும்
பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர்
தாங்குமதி வலவவென் றிழிந்தனன் றாங்காது
மணிபுரை செவ்வாய் மார்பகஞ் சிவணப்
புல்லிப் பெரும செல்லினி யகத்தென
கொடுப்போற் கொல்லான் கலுழ்தலின் தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்மென மகனொடு
தானே புகுதந் தோனே யானது
படுத்தனெ னாகுத னாணி யிடித்திவன்
கலக்கினன் போலுமிக் கொடியோ னெனச்சென்
றலைக்குங் கோலொடு குறுகத் தலைக்கொண்
டிமிழ்கண் முழவி னின்சீர் அவர்மனைப்
பயிர்வன போலவந் திசைப்பவுந் தவிரான்
கழங்கா டாயத் தன்றுநம் அருளிய
பழங்கண் ணோட்டமும் நலிய
அழுங்கினன் அல்லனோ வயர்ந்ததன் மணனே."

எனவும் வரும்.

தலைவி தலைவனைப் புகழ்தற்குச் செய்யுள்:

1"கொண்டானிற் றுன்னிய கேளிர்மற் றில்லை குறிப்பினென்று
தண்டா தவர்சொன்ன சால்புகண் டேன்றல மேழ்புரக்கும்
வண்டார் மலர்ப்பயன் வாணன்றென் மாறை மகிழ்நர்முன்னாள்
உண்டா கியபழங் கேண்மையிந் நாளு மொழிந்திலரே."

என வரும்.

பாங்கி மனைவியைப் புகழ்தற்குச் செய்யுள்:

2"சிறந்தார் புகழ்தருந் தீம்புன லூரன் செய் தீமையெல்லா
மறந்தார்வ மெய்தி வணங்குத லாலிவள் வாணன்றஞ்சை
நிறந்தா ரகையன்ன நித்திலம் போலு நெடுங்குலத்திற்
பிறந்தார் நிறைந்தகற் போர்வடி வேபெற்ற பெற்றியளே."

எனவும்,

3"யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பிற் றமிய வைகிய



1.. த. கோ. செ : 406.

2. த. கோ. செ : 407.

3. குறு. செ : 9.