289

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட பெயருட் குரவராதியராற் பெற்ற பெயரினைக் கிளவித் தலைமகற்குச் சொல்லார் புலவர் என்றவாறு.

(39)

அகப்பாட்டினுள் தலைமக்கள் வருந் திறன்

249. இருவரும் ஒருங்கே வருதலும் தனித்தனி
வருதலும் இருவரும் வாரா தொழிதலும்
உரிய என்மனார் உணர்ந்திசி னோரே.

(இ - ம்.) அகப்பாட்டினுள் தலைமக்கள் வரும் வகையும் வாராவகையும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட தலைமக்கள் இருவரும் கூட வருதலும், பாட்டுடைத் தலைமகனே வருதலும், கிளவித் தலைமகனே வருதலும், அவ்விருவரும் வாராதொழிதலும் 1உரியவாம், அகப்பாட்டிற்குள் என்று சொன்னார் அறிந்தோர் என்றவாறு.

2"அரிற்பவர் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉங்
தண்டுறை யூரன் பெண்டினை யாயிற்
பலவா குகநின் னெஞ்சிற் படரே
ஓவா தீயு மாரி வண்கைக்
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சிக்
கொன்முனை யிரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே."

என்னும் பாட்டினுள் இருவரும் வந்தவாறுகண்டுகொள்க.

3"பெருங்கரை நிவந்த சிறுநறு நெய்தலுங்
கருங்கயத் தமன்ற செந்தா மரையும்
அரும்பவிழ் புறவிற் பூத்த முல்லையும்
இரும்புபொதிந் திணரிய பொன்னவிழ் வேங்கையும்
ஒருங்குநின்று கமழும் பலர்மல்கு மறுகிற்


1. உரியவாம் என்பதற்குஎழுவாய் அகப்பாட்டுக்கள் எனக்கொள்க.

2. குறுந். செ : 91. இதில் ஊரன் என்றது கிளவித் தலைவன் பெயர்; அஞ்சி: என்றது பாட்டுடைத் தலைவர் பெயர்.

3. இதில் தொண்டிக் கோமான் என்பது பாட்டுடைத் தலைவன் பெயர்.

அ.வி.-19