என்னை? 1"காப்புக் கைமிக்குக் காமம் பெருகினும் நொதுமலர் வரையும் பருவ மாயினும் வரைவெதிர் கொள்ளாது தமரவண மறுப்பினும் அவனூ றஞ்சுங் கால மாயினும் அந்நா லிடத்து மெய்ந்நா ணொரீஇ யறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரித்தே" என்றாராகலின். (47) அறத்தொடு நிற்றற்கு உரியாரும், அவர்கள் அறத்தொடு நிற்கும் நெறியும் 48. தலைவி பாங்கிக் கறத்தொடு நிற்கும் பாங்கி செவிலிக் கறத்தொடு நிற்கும் செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்கும் நற்றாய் தந்தை தன்னையர்க் கறத்தொடு நிற்கும் என்ப நெறியுணர்ந் தோரே. (இ - ம்.) அறத்தொடுநிற்றற்கு உரியாரை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தலைவி முதலாய நால்வரும் இவ்வாறு அறத்தொடு நிற்றற்கு உரியர் என்று சொல்லுவர் அகப்பொருளிலக்கணம் அறிந்தோர் என்றவாறு. (48) தலைமகள் அறத்தொடு நிற்கும் இடம் 49. ஒருபுணர் வொழிந்தவற் றொருவழித் தணப்பவும் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரியவும் இறைவனைச் செவிலி குறிவயிற் காணவும் மனைவயிற் செறிப்பவும் வருத்தங் கூரின் வினவியக் கண்ணும் வினவாக் கண்ணும் அனநடைக் கிழத்தி அறத்தொடு நிற்கும். (இ - ம்.) தலைமகள் அறத்தொடு நிற்குமிடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பாங்கியிற்கூட்டம் என்னு மொன்று நீங்கிய மூன்று புணர்ச்சிக்கண்ணும், தலைமகன் ஒருவழித் தணத்தலா
1. இறையனார் அகப்பொருள், சூ: 29.
|