33

னும், வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதலானும், செவிலி தலைமகனைக் குறிவயிற் காண்டலானும், இற்செறித்தலானும், தனக்கு வருத்தம் மிகுமாயின் தன்னை அவள் வினவியவிடத்தும், வினவாதவிடத்தும் தலைமகள் பாங்கிக்கு அறத்தொடு நிற்கும் என்றவாறு.

பாங்கிக்கு என்பது அதிகாரத்தான் வந்தது. இதற்கு விதி யாதோவெனின்?

"வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்
வரையா நாளிடை வந்தோன் முட்டினும்
உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணும்
தானே கூறுங் காலமு முளவே", என்பதாம்.

(49)

பாங்கி அறத்தொடுநிற்கும் திறம்

50. முன்னிலைப் புறமொழி முன்னிலை மொழிகளிற்
சின்மொழிப் பாங்கி செவிலிக் குணர்த்தும்.

(இ - ம்.) பாங்கி அறத்தொடு நிற்கும் திறம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) முன்னிலைப் புறமொழியும், முன்னிலைமொழியுமாகிய இரண்டினாலும் பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் என்றவாறு.

(50)

செவிலி அறத்தொடுநிற்கும் திறம்

51. செவிலிநற் றாய்க்குக் கவலையின் றுணர்த்தும்.

(இ - ம்.) செவிலி அறத்தொடு நிற்குந் திறம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) செவிலி அறத்தொடு நிற்குங் காலத்து நற்றாய்க்கு விளங்க அறிவிக்கும் என்றவாறு.

(51)

நற்றாய் அறத்தொடு நிற்கும் திறம்

52. நற்றாய் அறத்தொடு நிற்குங் காலைக்
1குரவனுந் தன்னையுங் குறிப்பி னுணர்ப.

(இ - ம்.) நற்றாய் அறத்தொடு நிற்குந் திறம் உணர்த்துதல் நுதலிற்று.


1. தந்தையும், தமையனும்.