1"வண்டே யிழையே வள்ளி பூவே கண்ணே யலமர லிமைப்பே யச்சமென் றன்னவை பிறவு 2மாங்கணிகழ் கின்ற ஐயங் களையுங் கருவி யென்ப" என்றாராகலின், அதற்குச் செய்யுள்: 3"மையார் குவளை வயற்றஞ்சை வாணனை வாழ்த்தலர்போல் நையா தொழிமதி நன்னெஞ்ச மேயினி நம்மினுந்தன் நெய்யார் கருங்குழற் செம்மலர் வாடின நீலவுண்கண் கையா லழைப்பன போலிமை யாநிற்குங் காரிகைக்கே" எனவும், 4"திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும் இருநிலஞ் சேவடியுந் தோயு-மரிபரந்த போகித ழுண்கணு மிமைக்கும் ஆகு மற்றிவ ளகலிடத் தணங்கே" எனவும் வரும். (5) குறிப்பறிதல் 122. அரிவை நாட்ட மகத்துநிகழ் வேட்கை தெரிய வுணர்த்துங் குரிசிற் கென்ப. (இ - ம்.) குறிப்பறிதற்கு ஏது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தலைமகளுள்ளத்து நிகழாநின்ற வேட்கையினைத் தலைமகற்கு விளங்க அறிவிக்கும் அவள் கண் என்றவாறு. என்னை? 5"நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும்" என்றாராகலின். அதற்குச் செய்யுள்:-
1. தொல், பொருள், களவியல், சூ: 4. 2. 'ஆங்கவ ணிகழ, நின்றவைகளையும்' என்பது தொல்காப்பியத்தில் உள்ள பாடம். 3. த. கோ. செ. 3 4. பு. வெ. கை. ப. செ. 3. 5. தொல், பொருள், களவியல், சூ: 5.
|