தவளை குதிக்குந் தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன்வெற்பில் இவளை வரக்கண்டு நீயணங் கேபின் னெழுந்தருளே" எனவும், "அம்ம வாழி வெம்முலை யணங்கே நிலனோ விசும்போ நீரோ வரையோ அலமருந் தனிக்கோ லஞ்சிறைச் சேவல் உளிவாய்ப் புட்கொடி யினியன் றொண்டித் தண்கயத் தலர்ந்த செந்தா மரையோ யாவ தாகநின் னுறைபதி தானே மாயிருஞ் சிலம்பின் மடமகண் மாவின் றண்டளிர் புரையு மேனி வண்டுகொளச் சொரிமது விழிந்த பின்னருங் கூழை நின்னே போலு மின்னிசைத் தேமொழி யென்னிணைக் குறுமகட் பிரிந்தவென் இன்ன னெஞ்சத் தொன்றுதெரி விலனே" எனவும் வரும். நடுங்க நாட்டத்திற்குச் செய்யுள்: 1"பால்போன் மொழிவஞ்சி யஞ்சிநின் றேனிந்தப் பார்முழுது மால்போற் புரந்தவன் மாறை வரோதயன் வாணன்வென்றி வேல்போற் சிவந்து நெறிமுறை கோடிய வேந்தன்வெய்ய கோல்போற் கொடியன வாங்கொலை யானையின் கோடு கண்டே" எனவும், 2"பண்டிப் புனத்துட் பகலிடத் தேனலுட் கண்டிக் களிற்றை யறிவன்மற்-றிண்டிக் கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணா யுதிர முடைத்திதன் கோடு" எனவும் வரும். இவற்றுள், முன்னைய மூன்றும் மெய்யினாற் சொல்லிப் பின்னைய மூன்றும் பொய்யினாற் சொல்லிய, பிறவுமன்ன : இவற்றுள் நடுங்க நாட்டத்திற்குச் சான்றோர் செய்யுளில்லை; ஆகலின், அஃதிலக்கணமன்று. (23)
1. த. கோ. செ: 68. 2. தொல், பொருள், களவியல், 23ஆம் சூ. உரைமேற்கோள்.
|