குறையுற உணர்தலின் திறம் 140. பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுத்தோன் கண்ணியுந் தழையு மேந்தி நண்ணி ஊர்பெயர் கெடுதியோ டொழிந்தவும் வினாவுழி யாரே இவர்மனத் தெண்ண மியாதெனத் தேர்தலும் எண்ணந் தெளிதலும் எனவாங் கோரிரண் டாகுங் குறையுற வுணர்தல். (இ - ம்.) குறையுற வுணர்தலின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இயற்கைப் புணர்ச்சிப்பின்னே தலைமகளாற் பேணப்பட்ட வாயிலைப் பெற்றுப் பின் இரந்து குறையுறுதலை வலியுறுத்த தலைமகன், கண்ணியும் தழையும் ஏந்திச் சார்ந்து நின்று ஊரும் பெயரும் கெடுதியும் ஒழிந்தவும் வினாயவிடத்து இவர் யாரெனவும் மனத்தின்கணுளதாகிய எண்ணம் யாதெனவும் பாங்கி யாராய்தலும் அவனகத்து எண்ணத்தினைத் தெளிதலும் என இரண்டாங் குறையுற வுணர்தல் என்றவாறு. அவற்றுள், பாங்கியை இரவு வலியுறுத்தற்குச் செய்யுள்: 1"பொருமணி வெண்டிரைப் பைங்கடல் வங்கம் பொருந்திமுன்பு தருமணி பின்பெற் றணிபவர் போற்சென்று சார்ந்திரந்து பருமணி நன்கலப் பாங்கியை நீங்கியப் பாவையைநா மருமணி வண்டுறை தார்வாணன் மாறை மருவுதுமே" என வரும். ஊர் வினாதற்குச் செய்யுள்: 2"புதியேன் மிகவிப் புனத்திற் கியான்றனிப் போந்தனனும் பதியேது செல்லும் படிசொல்லு வீர்படி மேற்படிந்த மதியேய் சுதைமதில் சூழ்தஞ்சை வாணன்றென் மாறைவையை நதியேய் சுழிநிக ரும்பழி திருந்தி நல்லவரே" என வரும். பேர் வினாதற்குச் செய்யுள்: 3"கரைத்தாவி யுந்திய காவிரி வைகிய காலத்தினுந் தரைத்தாரு வன்னசெந் தண்ணளி வாணன் றமிழ்த்தஞ்சைசூழ்
1. த. கோ. செ: 69. 2. த. கோ. செ: 70. 3. த. கோ. செ: 71.
|