62முன்னுரை

வேதகற்ப   சூத்திரங்களிலும்   இவ்வழக்குகள்   வந்துள்ளன    எனவும்,
தைத்திரீயப் பிராதிசாக்கியம், காத்தியாயனப் பிராதி  சாக்கியம், பாணினீயம், பதஞ்சலி  மாபாடியம்  என்பன ஐந்திர இலக்கண  மரபினை  எடுத்தாண்ட நூல்கள்  எனவும்,  இக்குறிப்புக்களான்  ஐந்திரமென்னும் பெயருடையதோர் இலக்கணத்தொகுதி  இருந்தமை  உறுதியாதல் புலனாகும் எனவும் ‘டாக்டர் பர்னல்’ என்னும்  பேரறிஞர் ஆராய்ந்து விளக்கியுள்ளார். எனினும் அஃது என்னென்ன  பொருள்பற்றி  ஆராய்ந்து  அமைக்கப்  பெற்றதென  அவர்
விளக்கவில்லை.
  

இனி ஐந்திரமென்னும்  இந்நூல் தமிழகத்திற்றோன்றியதா?  வடபுலத்தில் தோன்றியதா?    என்பது    பற்றி   யாரும்   கருதவில்லை.   அதனான் ஆயவுமில்லை.  இந்திரன்   என்றவுடன்  அவன் வடமொழியாளன்  எனக் கருதினர்  போலும்.    சங்கரர்   இராமானுசர்   போன்ற தென்னாட்டவர் வடமொழியில்   மிகச்சிறந்த   நூல்களை  இயற்றியுள்ளமையைக்  கருதின் இதுபற்றிச் சிறிது எண்ணுதல் தகும்.
  

தலைச்சங்க   காலத்திலேயே    சமற்கிருத   மொழி   தென்னகத்தில் பயிலப்பட்டு  வந்துள்ளது.  தமிழகச்  சான்றோர்  சமற்கிருதச் சொற்களுள் தமிழோடொத்தவற்றைச்    செய்யுட் சொல்    நான்கனுள்      ஒன்றாகக் கூறியுள்ளனர். ஆரியச் சிதைவுச் சொற்களைப்  பயன்படுத்தும் முறையையும் கூறியுள்ளனர்.  இன்றைக்கு  வடமொழி  எனக்  கூறப்பெறும்  சமற்கிருதம்
செயற்கை  மொழியாதலின் எந்த ஒரு  நிலப்பகுதிக்கும்  உரியதாயில்லாமல்
பாரதம்    முழுமைக்கும்   உரிய   பொதுமொழியாகத்   திகழ்ந்தமையின் தமிழர்க்கும்  அஃது   உரிமையுடையதாகும்.  அது யாவர்க்கும் பொதுவாக நூலுக்குரிய  மொழியாக  இருந்தமையான்  அதனைத்  தேவமொழி*  என வழங்கினர்.  அவ்வந் நாட்டிற்குரிய  பண்பாடு  நாகரிகம்   முதலியவற்றை அவரவர்    மொழியிலும்,   எல்லா   நாட்டிற்கும்    பொதுவானவற்றைச் சமற்கிருதத்திலும்  பண்டைச் சான்றோர்கள் (நூல்களைப்)  படைத்திருத்தல் வேண்டும்.
  

அகப்பொருளுள்  கற்புக்  காலத்தில்  தலைவன்  பிரியும்  பிரிவுகளுள்
ஓதற்பிரிவும்     ஒன்று.    அஃது     உயர்ந்தோர்க்குரிய    தென்றும், மூன்றாண்டுகள்வரை அது நிகழும் என்றும், கல்விப்பிரிவை மேற்கொள்ளும் தலைவன், தான் அறிந்தவற்றைப்
  


* தேவு   என்றால்  புலம்.  அஃதாவது  அறிவு  என்பது  பொருள்.
தெவுகொளற் பொருட்டு என்பது சூத்திரம். (உரியியல்-49)