92நூன்மரபு

இந்நான்கு சூத்திரத்தானும் முறையே  ஙகரத்தின்முன்  ககரம்  ஒன்றும், ஞகரத்தின்முன் சகரயகரங்களாகிய இரண்டும், ணகரத்தின்முன்டகசஞபமயவ
என்னும் எட்டும், நகரத்தின்முன்  தகரயகரமாகிய இரண்டும், மகரத்தின்முன்
பகரம்,  யகரம்,  வகரமாகிய  மூன்றும்,  னகரத்தின்  முன்   றகசஞபமயவ
என்னும்  எட்டும்  மொழிக்கண் இணைந்து  நிற்கும்  என்பதும்  பிறவந்து
நில்லா என்பதும் புலப்படுத்தப்பட்டதென்க.
 

சூ. 29:யரழ என்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்
(29)
 
க-து:யரழ என்னும் இடைஎழுத்துக்களின் முன்னர்க் கசதப ஞநம யவ,
ங என்பவை வந்து மயங்குமென்கின்றது.
 

பொருள்:யரழ என்னும் புள்ளி எழுத்துக்களின்  முன்னர் மொழிக்கண் முதலாகி  வரும்  என்னும்  கதநபம  சவயஞ  என்னும்  ஒன்பது   உயிர்
மெய்யெழுத்தும், மொழிமுதலாகாமல் புணர்ச்சி இயல்பான் மிக்குவரும் ஙகர
ஒற்றும் தனித்தனியே வந்து அவற்றின் ஓசையொடு மயங்கும்.
 

இப்பத்தினுள் ஙகரம் ஒற்றெழுத்தாகவன்றி உயிர்மெய்யாக வாராமையின்
அதனைப்  பிரித்துக்   கூறினார்.  ஒடு   என்பது   எண்ணிடைச்  சொல். முதலாகெழுத்தொடு-ஙகரமொடு  எனத்  தனித்தனிக்  கூட்டுக.   ‘‘என்றும் எனவும்  ஒடுவும்  தோன்றி  ஒன்றுவழி  யுடைய  எண்ணினுட்  பிரிந்தே’’ (இடையியல்-46) என்பதனாற் பிரிந்து கூடிற்றென்க.
 

எடுத்துக்காட்டு :
 

செய்கை

ஆர்கலிஆழ்கடல்

தூய்து

சார்தல்ஆழ்தல்

பாய்நர்

தேர்நர்வாழ்நர்

ஆய்பவர்

சேர்பவர்வீழ்பவர்

தூய்மை

நேர்மைதாழ்மை

*கொய்சிறை

*ஓர்சொல்*பாழ்சுரம்

*மெய்வழி

*நேர்வழி*ஊழ்வினை

*பாய்ஞெண்டு

*ஊர்ஞெண்டு*வாழ்ஞெண்டு

செய்யவள்

*போர்யானை*காழ்யானை

*வேய்ங்குழல்

*ஆர்ங்கோடு*பாழ்ங்கிணறு
 

வேய்ங்குழல் முதலிய மூன்றினும்  வந்த ஙகரம் புணர்ச்சி  விகாரத்தான் வந்துள்ளமையைப் புள்ளி  மயங்கியல் 65, 68, 92  ஆகிய சூத்திரங்களான் அறிக. *இக்குறியிடப் பெற்றவை