‘‘குற்றியலிகரம்’’ என்பது முதலாக இதுவரை கூறப்பெற்ற இலக்கணங்கள் எழுத்தொலியமைப்புப் பற்றியனவே எனினும் இவ்ஓசை வேறுபாடுகள் மொழிக்கண்ணன்றிப்பெறப்படாமையின் நூன்மரபின் ஒழிபாக மொழிமரபின் முதற்கண் வைத்தோதினார். |
சூ. 43: | நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி |
(10) |
க-து: | இனிமொழிமரபிற்குரிய இலக்கணங்கூறத் தொடங்கி இச் சூத்திரத்தான் எழுத்தினான் மொழியாமாறு கூறுகின்றார். |
பொருள்: தனித்து ஓரெழுத் தொருமொழியாகி வருவன நெட்டெழுத்து ஏழுமேயாம். |
எ - டு : ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனவும் கா, நீ, பூ, பே, கை, வௌ எனவும் வரும். |
‘‘மெய்யொடு இயையினும் உயிரியல்திரியாது’’ ‘‘உயிர்மெய் யல்லன மொழி முதலாகா’’ ‘‘உயிர்மெய் யீறும் உயரீற் றியற்றே’’ என்பன முதலாயவற்றான் நெட்டெழுத்தென்றது உயிர்மெய்யினையும் அகப்படுத்து நின்றதென்க. ஏழும் என்னும் முற்றும்மை விகாரத்தாற்றொக்கது. |
சூ. 44: | குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே |
(11) |
க-து: | இதுவுமது. |
பொருள்: குற்றெழுத்து ஐந்தும் தனித்து நிறைவுடைய மொழியாக வருதலில்லை. நிறைவுடைய மொழியாவன பெயரும், வினையுமாம். எனவே குறைவுடையனவாய் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமாக வரும் என்பது கருத்து. |
அஃதாவது சுட்டுப்பெயர் வினாப்பெயர்கட்கு முதனிலையாயும், சுட்டிடைச் சொல்லாயும், ஒப்புணர்த்தும் குறையுரிச்சொல்லாயும் வரும். |
எ - டு : அவ்வீடு, இப்பொருள், உக்கடல், எவன், ஒவ்வும், எனவரும். |
இனி ஐந்தும் என்னும் முற்றும்மையை எச்சமாக்கி மொழி நிறைபாகச் சிலவருதலும் கொள்க. |
எ - டு : து-நொ, எனவரும். இவைபடுத்தலோசையாற் பெயரும், எடுத்த லோசையான் வினையும்ஆம், ஓராற்றான் இவையும் முதனிலைகளே ஆதலின் உம்மையாற்றழுவப்பெற்றன என்க. |