xxxiii
 

நூ.  303.  தனித்து   ஆண்-பெண்   என்று   வருவழி  அச்சொற்கள்
உயர்திணையையே   சுட்டும்  என்பது   தொ.பொ.624  ஆம்  நூற்பாவில்
தெளியப்படும்.  உயர்திணைப்  பெயர்ப்  புணர்ச்சியை  ஆசிரியர்  விதந்து
கூறுவார். அஃறிணைப்பெயர்  கவண்  கால்,  பரண்  கால் எனப்புணர்வது
போல உயர்திணைப் பெயராகிய  ஆண்  பெண்  என்பனவும்  இயல்பாகப்
புணரும்  என்பது  அஃறிணை   விரவுப்  பெயரைக்  குறிக்குமா  என்பது
ஆராயத்தக்கது.
 

நூ. 310. துவர என்பது முற்ற என்ற  பொருள்  தருவதாகலின்  ஏனைய
இயல்புகணத்தும் ஆசிரியர்  நச்சினார்க்கினியர்  இவ்விதி  கொண்டுள்ளார். துவர என்பதனை மிகைச் சொல்லாகக் கொண்டாரில்லர்.40
 

நூ.311. குள +  ஆம்பல்=குளாஅம்பல்  தீர்க்க  சந்திபோல்  வதாகலின் ஆகாரம்   அகரம்   ஆயிற்று   என்று   கருதினர்   போலும்  ஆகாரம் அளபெடைபோல உடம்படுமெய்  பெறாது  குளாஆம்பல்  என்று  நிற்கும்
திறன் ஆராயத்தக்கது.
 

நூ. 312. ஒல்வழி-வந்துள்ள  இரண்டு  இடங்களிற்போலச் (நூ. 114, 246)
செல்வழி என்பது வழக்கத்தில்  நிகழுமிடன் என்ற பொருளில் வருவதனால்
செல்வழியை விடுத்து ஒல்வழியைக் கோடலான் சிறப்பு ஏதுமின்று.
 

நூ. 317. ஆயிரத்துக்குறை -  ஆயிரமும்  குறையும்.  இஃது  உம்மைத்
தொகையேயன்றி  வேற்றுமைத்  தொகையன்று.  ஆயிரத்தினுடைய   குறை
என்பதே  வேற்றுமைத்தொகை. இது கலக்குறை  போல்வது.   குறை,  கூறு
என்பவை கருத்து வகையான் எண்ணை  உணர்த்தலின் இதனை மிகையாற்
கோடல் ஒவ்வாது என்ற கருத்து ஆராயத்தக்கது.
 

நூ.  325.   நும்  என்பதனைப்  பெயர்  அடிப்படைச்  சொல்லாகவும்
(பிராதிபதிகம்) நீயிர் என்பதனை அதன் முதல்  வேற்றுமை  உருவமாகவும்
(பிரதமா  விபத்தி) கொள்ளுதல் வடமொழி. இவ்வாறு இருக்கும் என்பதனை
ஓர்   எடுத்துக்காட்டுக்  கொண்டு   ஆசிரியர்  தொல்காப்பியனார்  தமிழ்
நூலாருக்குக் குறிப்பிட்ட செயலாகப்  பிரயோக   விவேக   உரை  கூறும்
செய்திகள் ஆராய்ந்து கொள்ளத்தக்கன.41
 


40. இளம் பூரணர் கொண்டுள்ளார்.
 

41. மூவிடப்பெயர் ஆய்வுரையுள் விளக்கமாகும்.