130மொழிமரபு

சூ. 83: 

உந்தி முதலா முந்துவளி தோன்றித்

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்

பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

உறுப்புற் றமைய நெறிப்பட நாடி

எல்லா எழுத்தும் சொல்லுங் காலை

பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல

திறப்படத் தெரியும் காட்சி யான 
(1)
 

க-து:

பொதுப்பட    எழுத்துக்களெல்லாம்   தோன்றுமாறும்,   அவை
உருவாகிப் பிறக்குமாறும் கூறுமுகத்தான் அவற்றைப்  பிறப்பிக்கும்
நிலைக்களனும் வினைக்களனும் இவை எனக் கூறுகின்றது.
 

பொருள்:எல்லா  எழுத்தும்=மொழிக்கு  உறுப்பாக  நிகழும்   எல்லா
எழுத்துக்களும், உந்திமுதலா முந்து வளிதோன்றித் தலையினும் மிடற்றினும்
நெஞ்சினும்  நிலைஇ=கொப்பூழினிடமாகத்  தோன்றி  மேலெழும் (உதானன்
என்னும்)   ஓசைக்காற்று,  தலையும்  மிடறும்,   நெஞ்சுமாகிய   மூவகைக்
களத்தும்நிலை  பெற்று,  பல்லும்  இதழும்  நாவும்  மூக்கும்  அண்ணமும்
உளப்பட எண்முறைநிலையான் உறுப்புற்றமைய =  பல்லும் இதழும்  நாவும்
மூக்கும்  அண்ணமுமாகிய ஐவகை வினைக்களங்கள்  உட்பட அவ்  எட்டு
வகையாகிய    தன்மையுடைய   உறுப்புக்களைப்   பொருந்தியமைதலான்,
நெறிப்பட  நாடிச்சொல்லுங்காலை = அவற்றை   அவற்றின் இயல்புதோன்ற
நோக்கி ஒருவன்   சொல்லுமிடத்து,  வேறு  வேறியல பிறப்பின்ஆக்கம் =
வேறுவேறு இலக்கணத்தையுடைய  பிறப்பினான் ஆகும் அவற்றின் உருவும்
வடிவும்,   காட்சியான்   திறப்படத்    தெரியும்   =   காட்சியளவையான்
செம்மையாகப் புலப்படும்.
 

எல்லா எழுத்தும் உறுப்புற்றமையை நாடிச்  சொல்லுங்காலை  பிறப்பின்
ஆக்கம் காட்சியான் திறம்படத்  தெரியும் எனக்கூட்டி  வினைமுடிபு செய்க.
வளி=ஓசைக்காற்று.  ஆக்கம்  (காரியமாகிய)  உருவும்  வடிவும்.  காட்சி  =
மெய்யுணர்வான்   எய்தும்   தோற்றம்.    நிலைக்களனும்     ஓராற்றான்
உறுப்பாகலின்   வினைக்களங்களொடு   கூட்டி  ‘‘எண்முறை   நிலையான்
உறுப்பு’’  என்றார். ‘அமைய’ என்னும் செயவெனச்சம் காரணப்பொருட்டாய்
நின்றது.
 

இனி,   முந்துவளியானது  நெஞ்சு,  மிடறு,  தலை   எனச்   செல்லும்
முறைப்படி      கூறாமல்     தலை,     மிடறு,    நெஞ்சு   எனமுறை
மாற்றிக்கூறியமைக்கும், மூக்கு, அண்ணம், நா, பல், இதழ், மிடறு