134மொழிமரபு

இன்னும்  இதனானே   ஒவ்வோரெழுத்தையும்  கூறுமிடத்து  எடுத்தல்,
படுத்தல்,  நலிதல்,   உறழ்தல்   என்னும்    கருத்தாவின்   முயற்சியான்
வேறுபடுதலையும் கண்டு கொள்க.
 

சூ. 89: 

ககார ஙகாரம் முதல்நா அண்ணம்
(7)
 

க-து:

மெய்களுள் இரண்டற்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்: ககாரம்  ஙகாரம்   என்னும்   மெய்யெழுத்துக்கள்   அடிநா
அடிஅண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும்.
 

‘உற’  ‘இயலும்’  என்பவை   மேலைச்சூத்திரத்தினின்று  அதிகரித்தன.
பின்வரும் இரண்டு சூத்திரங்கட்கும் இஃதொக்கும்.
 

சூ. 90: 

சகார ஞகாரம் இடைநா அண்ணம்
(8)
 

க-து: 

இதுவுமது.
 

பொருள்: சகாரம் ஞகாரம் என்னும் மெய்யெழுத்துக்கள் இடைநா இடை
அண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும்.
 

சூ. 91: 

டகார ணகாரம் நுனிநா அண்ணம்
(9)
 

க-து: 

இதுவுமது.
 

பொருள்: டகாரம் ணகாரம் என்னும் மெய்யெழுத்துக்கள் நுனிநா நுனி
அண்ணத்தைப் பொருந்தப்பிறக்கும்.
 

‘‘தத்தம் திரிபே சிறிய’’ என்றதனான் நாச்சிறிது உள்வளைதல் கொள்க.
 

சூ. 92: 

அவ்வா றெழுத்தும் மூவகைப் பிறப்பின 
(10)
 

க-து:
 

இரண்டுமுதலாக    இணைத்துக்    கூறப்பெறும்   எழுத்துக்கள்
முயற்சியான்    சிறிதுவேறுபடுமென    மேல்புறனடை   (சூ. 6)
கூறினமையின்  ஈண்டுக்    கங-சஞ-டண   என   இணைத்துக்
கூறியவற்றுள்ளும் அவ்வேறுபாடு  உண்டெனக்  கருதற்க. அவை
வளியிசையின் வேறுபட்டு  இரண்டாக  நின்றனவன்றிப்  பிறப்பிட
முயற்சியான்  ஒரு  தன்மையவே  எனப்  புறனடை  கூறுகின்றது.
ஐயமகற்றுதல் எனினும் ஒக்கும்.
 

பொருள்: மேல்இரண்டிரண்டாகச்  சேர்த்துக்  கூறப்பெற்ற  மூவிரண்டு
எழுத்துக்களும்,  வினைக்கள    முயற்சியான்    திரிபுடையவை    யல்ல;
மேற்கூறியாங்கு மூவகைப்பிறப்பினவேயாம். தேற்றேகாரம் தொக்கது.
 

வந்ததுகொண்டு    வாராததுணர்த்தல்      என்னும்      உத்தியான்,
வல்லெழுத்துக்கட்கு  நெஞ்சுவளியிசை  உரியதென்று  கொள்க.  என்னை?
வளியிசைமூன்றனுள் உயிரெழுத்துக்கள் ‘‘மிடற்றுப்