அவை பிறந்து வருமாறு: ‘‘மியா’’ என்பதன்கண் நிற்கும் குற்றியலிகரம் மகரத்தின் பிறப்பிடமாகிய இயைந்த இதழையும் யகரத்தின் பிறப்பிடமாகிய அடிநா அண்ணத்தையும் சார்ந்து தனது இயல்பு தோன்றப் பிறக்கும். |
‘நாகரிது’ என்னும் சொற்களுள் நிற்கும் குற்றியலுகரம் தனது பற்றுக் கோடாகிய ககரமெய் பிறக்குமிடத்தையும் சார்பாகிய ஆகாரத்தின் பிறப்பிடத்தையும் சார்ந்து தனது இயல்பு தோன்றப் பிறக்கும். |
‘அஃது’ என்னும் சொற்கண் நிற்கும் ஆய்தம் அகரத்திற்கும் தகரமெய்க்கும் உரிய அண்ணம் பல் நா ஆகிய உறுப்புக்களின் தொழிலான் அவற்றைச் சார்ந்து தனது இயல்பு தோன்றப் பிறக்கும். |
ஏனைய சொற்களின் கண்ணும் சார்பும் பற்றுக்கோடுமாகிய எழுத்துக்களின் பிறப்புவழி இவை தோன்றிவருமாறு சொல்லிக் கண்டுகொள்க. |
சூ. 102: | எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து |
| சொல்லிய பள்ளி எழுதரு வளியின் |
| பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து |
| அகத்தெழு வளியிசை அரில்தப நாடி |
| அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே |
| அஃதிவண் நுவலாது எழுந்து புறத்திசைக்கும் |
| மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே |
(20) |
க-து : | உந்திமுதலாத் தோன்றி உறழ்ந்தெழும் எழுத்துக்களுள் மந்திர நூலோர் கொள்ளும் மாத்திரை மரபு வேறு உண்டு. அஃது ஈண்டைக்கு வேண்டாமையான் செவிப்புலனாகப் பொருள் உணர்த்தும் எழுத்துக்களுக்கே ஈண்டு அளபு கூறப்பட்ட தென்கின்றது. |
பொருள்: சொல்லிய பள்ளி வளியின் எழுதரும் எல்லா எழுத்தும் = மூவகையாய இடங்களினிடமாக நின்று ஓசைக் காற்றினான் எழும் எனப்பெற்ற எல்லா எழுத்துக்களையும் கிளந்து, பிறப்பொடு விடுவழி=ஐவகை உறுப்புக்களினிடமாகக் கிளந்து அவ்வவற்றின் பிறப்பியல்புகளோடு செவிப்புலனாக வெளிப்படுத்துமிடத்து, அகத்தெழு வளியிசை உறழ்ச்சி வாரத்து=உந்தியினிடமாக அகத்தெழும் வளியிசை ஒன்றற் கொன்று முரண்பட்டு வருதலை, அரில்தபநாடி=குற்றமற ஆராய்ந்து, அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே = மாத்திரையான் அளவிட்டு மேற்கோடல் நிறைமொழி மாந்தராகிய |