பின்னது வேற்றுமை. மலர்கொடி-மலர்க்கொடி: முன்னது வினைத்தொகை; பின்னது வேற்றுமைத்தொகை. அவர் கண்டார் - அவர்க்கண்டார்; முன்னது முதல் வேற்றுமைத் தொடர்; பின்னது இரண்டாம் வேற்றுமைத் தொடர். நாகு சிறிது - நாகழகிது: முன்னது முற்றியலுகர மாதற்கும் ஏற்றது; பின்னது குற்றியலுகரமாயே புணர்ந்தது. ஏனையவும் இவ்வாறே சொற்பொருள் அமைதிக்கேற்பப் புணர்ச்சி நிலைமை அமைந்து வருமாற்றை மேல்வரும் விதிகளான் ஓர்ந்துணர்ந்து கொள்க. |
சூ. 108: | அவற்றுள் |
| நிறுத்த சொல்லின் ஈறாகு எழுத்தொடு |
| குறித்துவரு கிளவியின் முதல்எழுத் தியையப் |
| பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் |
| பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் |
| தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் |
| தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் |
| மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென |
| ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே |
(6) |
க-து : | மொழிபுணருங்கால் எய்தும் நிலை நான்கு என்கின்றது. |
பொருள்:நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியுமாகிய அவற்றுள், நிறுத்த சொல்லின்கண் ஈறாகிநிற்கும் எழுத்தொடு, குறித்துவருகிளவியின் முதல்எழுத்து இயையப், பெயர்ச்சொல்லொடு பெயர்ச்சொல்லைப் புணர்க்குமிடத்தும், பெயர்ச்சொல்லொடு தொழிற் சொல்லைப் புணர்க்குமிடத்தும், தொழிற் சொல்லொடு பெயர்ச் சொல்லைப் புணர்க்குமிடத்தும், தொழிற் சொல்லொடு தொழிற் சொல்லைப் புணர்க்குமிடத்தும், திரிபுறும் வகைமூன்றும்,இயல்பாகும் நிலை ஒன்றும் என அம்மொழிகள் புணருங்கால் ஆங்கு எய்தும் இலக்கணம் நால்வகையாகும். |
‘ஆங்கு’ என்றதனான் அத்திரிபுகள் சொல்லின் மூன்றிடத்தும் ஏற்றபெற்றி நிகழும் என அறிக. தொழில் என்றது தெரிநிலையும் குறிப்புமாகிய வினைச்சொற்களையும் எச்ச வினைகளையும் சிறுபான்மை தொழிற்பெயர்களையுமாம். |
எ-டு:கபிலர் நூல், நம்பி கற்றான், உண்டான் சாத்தன், வந்து நின்றான் எனவும், அவன் பொன்னன், பொன்னன் குழையன் எனவும், சாத்தன் வரவு, கொற்றன் வாழ்வு எனவும் வரும். |