162மொழிமரபு

பொருள் :வற்று  என்னும்  சாரியை,  சுட்டெழுத்தை முதலாகவுடைய
ஐகார ஈற்றுச் சுட்டுப்பெயரின் முன்னர் வகர உயிர்மெய்யுள் வகரமெய்கெட
அதனை ஊர்ந்துநின்ற அகரஉயிர் மட்டும் நிற்றல்   அதற்கு    உளதாகிய
பண்பாம்.
 

எ-டு :அவை + வற்று + ஐ = அவையற்றை   எனவரும்.  இடைவந்த
யகர  ஒற்று   உடம்படுமெய்யாகும்.   உருபிற்கென விதந்து கூறாமையான்,
அவையற்றுக்கோடு, இவையற்றுக்கோடு எனவும் வரும்.
 

சூ. 123 :

னஃகான் றஃகான் நான்க னுருபிற்கு

(21)
 
க-து :

னகார ஈற்றுச்சாரியைகட்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் :னகரஈற்றுச்சாரியை     நான்கினும்   உள்ள  னகர ஒற்று,
நான்கனுருபு வருமிடத்து றகர ஒற்றாகத் திரியும்.
 

எ-டு :ஆவிற்கு, விளவிற்கு, கோஒற்கு, ஒருபாற்கு, அதற்கு எனவரும்.
 

இவ்விதி  னகர ஈற்றுச் சாரியை நான்கற்கும் உரியதாகலின்‘‘அளவாகும்
மொழிமுதல்’’ என்பதன் பின்வையாமல் வற்றுச் சாரியையின் பின்வைத்தார்.
ஆண்டுவைப்பின் இவ்விதி ‘‘இன்’’  சாரியை   ஒன்றற்கே செல்லுமாகலான்
என்க.
 

சூ. 124:

ஆனின் னகரமும் அதனோ ரற்றே

நாள்முதல் வரூஉம் வன்முதற் றொழிற்கே

(22)
 
க-து :

ஆன்சாரியை பொருட்புணர்ச்சிக்கண் திரியுமாறு கூறுகின்றது.
 

பொருள் :நாட்பெயராகவரும்  சொல்லிற்கும்  வல்லெழுத்தை முதலாக
உடைய   தொழிற் சொற்களுக்கும் இடையே வரும் ஆன்சாரியையது னகர
ஒற்றும் முற்கூறிய ஆன் சாரியை போல றகரமாகத் திரியும்.
 

எ-டு:பரணியாற்கொண்டான் - ஆதிரையாற்கொண்டான்,   சென்றான்,
தந்தான், போயினான் எனவரும்.
 

இனி, இன்சாரியையினது    னகரஒற்று   வல்லெழுத்து முதலாய பெயர்,
வினைகள் வரின் றகரமாகத்திரியும் என்னும் விதிபற்றிய  சூத்திரம்  இதற்கு
முன்னமைந்திருத்தல்      வேண்டும்.    என்னை?  பனியிற்கொண்டான்,
வளியிற்கொண்டான், பறம்பிற்பாரி,   குறும்பிற்கொற்றன்     என்றாற்போல
இன்சாரியை பயின்று