நூன்மரபு163

வருதலானும்,  ‘‘ஆனின் னகரமும் அதனோ ரற்றே’’ என ஒருமையாகச்
சுட்டப்பட்டிருத்தலானும்   என்க.     உரையாசிரியன்மார்   இத்திரிபினை
உம்மையானும் உத்தியானும் தழுவிக் கொண்டனர்.
 

சூ. 125 :

அத்தின் அகரம் அகரமுனை இல்லை

(23)
 
க-து :

அத்துச்சாரியை எய்தும் திரிபு கூறுகின்றது.
 

பொருள்:  அத்துச்சாரியையின்கண்   உள்ள   அகரம்  அகர ஈற்றுச்
சொல்லின்முன் குன்றும். ஆண்டு அகரத்தின்  இசை    புலப்படாமையான்
‘இல்லை’ என்றார்.
 

எ-டு:  மக + அத்து + கை = மகத்துக்கை     எனவரும்.       இனி,
அத்துச்சாரியையன்றிப் பிறசொற்கள் வரினும் நிறுத்த சொல்லின்  அகரஈறு,
நாடாக + ஒன்றோ = நாடாகொன்றோ   எனவும், ஒழிக + இனி = ஒழிகினி
எனவும், உற்ற + உழி = உற்றுழி எனவும் கெடுதலின்  நிலைமொழி அகரம்
கெடுமென்றலே சால்புடைத்தென்பர் வேங்கடராசுலுரெட்டியார். இவை:  ஆ,
ஒழி, உறு என்னும் சொற்கள்   ஆக,    ஒழிக,   உற்ற   எனவிதி யீறாக
நின்றனவன்றி மக என்பது போல  இயல்பீற்றன   அல்ல. ஆதலின் இவை
புணர்ச்சி விகாரமெனப்படா.  இத்தகையன   செய்யுள் விகாரமாம் ஆதலின்
அவர் கருத்துப் பொருந்தாமையறிக.
 

சூ. 126 :

இக்கின் இகரமும் இகரமுனை அற்றே

(24)
 
க-து :

இக்குச் சாரியை திரியுமிடங்கூறுகின்றது.
 

பொருள்: இக்குச்சாரியையின் இகரம் இகர ஈற்றுச்சொல் முன் அத்தின்
அகரம் போல இல்லையாகும்.
 

எ-டு:  ஆடி  +  இக்கு  +  கொண்டான்  =  ஆடிக்குக்கொண்டான்
எனவரும்.
 

சூ. 127 :

ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும்

(25)
 
க-து :

இதுவுமது.
 

பொருள்:  இக்குச்    சாரியையின்     இகரம்    இகர  ஈற்றுச்சொல்
முன்னரேயன்றி ஐகார ஈற்றுச்சொல்முன்னரும் அவ்வியல் பெற்று  நிற்கும்.
 

எ-டு:  சித்திரை + இக்கு + கொண்டான் =சித்திரைக்குக்  கொண்டான்
எனவரும். திங்கள் முன்வரின் ‘இக்கேசாரியை’