எ-டு:புளியங்கோடு, புளியஞ்செதிள், புளியந்தோல் எனவரும். ‘‘வரூஉம்காலை’’ என்பது ‘‘காலை’’ எனக் குறைந்து நின்றது. |
‘தன்மெய்’ என்றதனான் தம், நம், நும் என்னும் சாரியைகளது மகர ஒற்றுத் திரிதலும் கொள்க என்பார். இவற்றைப் புள்ளிமயங்கியலுள் ஆசிரியர் எடுத்தோதுதலான் ஈண்டு மிகைப்படுத்து அடக்குதல் வேண்டா என்க. திரிந்து எனப்பொதுப்படக் கூறியிருப்பினும் திரிபு மூன்றனுள் மெய்பிறிதாதலை ஏற்புழிக் கோடல் என்பதனாற் கொள்க. |
சூ. 130 : | மென்மையும் இடைமையும் வரூஉங் காலை |
| இன்மை வேண்டும் என்மனார் புலவர் |
(28) |
க-து : | இதுவுமது. |
பொருள்:மெல்லெழுத்தும் இடையெழுத்தும் முதலாகி வருமிடத்து மேற்கூறிய அம்முச்சாரியையது மகரஒற்று இல்லையாதல் வேண்டுமென்பார் புலவர். |
எ-டு:புளியஞெரி, புளியநுனி, புளியமுரி எனவும், புளியயாக்கை, புளியவட்டு எனவும் வரும். (யாக்கை = கயிறு) உரையிற் கோடலாற் புளியவிலை என உயிர்வருங்காற் கெடுதலும் கொள்க என்பார் உரையாளர். உயிர்வரின் புளியிலை-எனச் சாரியையின்றியமையும் என்க.புளிங்கறி என்பது மரூஉ முடிபாகும். |
சூ. 131 : | இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு |
| இன்னென் சாரியை இன்மை வேண்டும் |
(29) |
க-து : | இன்சாரியை பற்றியதொரு மரபு கூறுகின்றது. |
பொருள் :இன் என்று சொல்லப்பட்டு வரும் ஐந்தாம் வேற்றுமை உருபிற்கு முன்னர், இன் என்னும் சாரியை இல்லையாதல் வேண்டும் என்று கூறுவர் புலவர். |
எ-டு:மலையின் வீழ்அருவி, ஊரின் நீங்கினான் என உருபு நிற்கச் சாரியை இல்லையாதல் கண்டு கொள்க. |
பாம்பினிற் கடிது தேள், ‘கற்பினின் வழா நற்பலஉதவி’ ‘அளவினிற்றிரியாது’ எனவருவனவற்றை இன்னோசைப் பயத்தவாய் வந்த செய்யுள் முடிபாகக்கொண்டு புறனடையுள் அடக்குக. |