170மொழிமரபு
சூ. 136 :

வரன்முறை மூன்றும் குற்றெழுத் துடைய

(34)
 
க-து :

மூன்று சாரியைகளும் பயிலுமிடம் கூறுகின்றது.
 

பொருள் :வரலாற்று  முறைமையான்  முற்கூறிய சாரியை மூன்றையும்
குற்றெழுத்துக்கள் உடையனவாகும்.
 

எ-டு:அகரம், அகாரம், அஃகான் எனவும் ககரம், மகாரம்,   றஃகான்
எனவும் வரும்.
 

‘‘வரன்முறை’’என்றதனான் கான் சாரியை வருங்கால் இடையே ஆய்தம்
செய்யுள் விகாரமாக வருதல் கொள்க. ககரம் என்புழி  உயிர்  மெய்யாயின்
கரம் சாரியையாம். மெய்யாயின்  அம்மெய்யின்  சாரியையாகிய அகரத்தின்
சாரியையாம்.
 

சூ. 137 :

ஐகார ஒளகாரம் கானொடுந் தோன்றும்

(35)
 
க-து :

‘நெட்டெழுத்திலவே’   என்றவற்றுள்   ஐகார,  ஒளகாரங்கட்குப்
புறனடை கூறுகின்றது.
 

பொருள்:நெட்டெழுத்துள்   ஐகாரமும்  ஒளகாரமும் காரச்சாரியையே
யன்றி முன்விலக்கப்பெற்ற கான் சாரியையொடும் தோன்றிவரும்.
 

எச்சஉம்மை   இழிவு   தோன்ற நின்றது. இவை மாற்றெழுத்துக்களான்
மாத்திரை குறைதலின் என்க. எ-டு : ஐகான், ஒளகான் எனவரும்.
 

கரம்,   காரம்,    கான்    என்பவை    தமிழடியாக  ஆக்கம் பெற்ற
இடைச்சொற்களேயாம்.     கரம்,    கான்    என்பவை    வடமொழியிற்
பெறப்படாமையறிக. கம், கல், கர், கன் என்பவை இசைக்  குறிப்புணர்த்தும்
உரியடிகளாம். அவற்றுள் ‘கர்’ என்பது உரிமை   சுட்டிவரும் அம் என்னும்
விகுதியொடு கூடி ஒரு சொல்லாக ஆக்கம்  பெற்று  இலக்கணக் குறியீடாக
அமைந்தது. காரம் என்பது அதன்   நெட்டுருவம்.   ‘கன்’  என்பது முதல்
நீண்டு அவ்வளவில் இலக்கணக் குறியீடாக அமைந்ததென்க.
 

சூ. 138 :

புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலாது

மெய்யொடு சிவணும் அவ்வியல் கெடுத்தே

(36)
 
க-து:

இனிவரும்      சிறப்போத்துக்களுள்     நிறுத்த    சொல்லும்
குறித்துவருகிளவியும்     உயிர்ஈறும்  உயிர்முதலும், புள்ளியீறும்
(உயிர்) மெய்ம்முதலுமாகப் புணரும் இலக்கணத்தில்,  உயிரீற்றுப்
புணர்ச்சி இயல்பை உயிர்மயங்கியல் என்றும்,மெய்யீற்றுப்புணர்ச்சி
இயல்பைப் புள்ளிமயங்கியலென்றும் கூறுவார். ஈறும் முதலும்