நூன்மரபு173

‘‘உடம்படுமெய்யின்    உருவு     கொளல்’’    என்று பாடமோதுவார்
உரையாசிரியன்மார். அப்பாடத்திற்குப் பொருள் நோக்கின்மையறிக.
 

பேச்சு    வழக்கினும்     உரைநடை    வழக்கினும்   உடம்படுமெய்
கொள்ளாதொழியினும் செய்யுட்கண் ஓசை இயைபு செய்தலின்   ஒருவந்தம்
கொள்ளல் வேண்டுமென்பார் ‘‘வரையார்’’   எனக்கூறினார்.   ஒருமொழிப்
புணர்ச்சிக்கண் நிற்கும் உயிரும்,   புணர்ச்சி  விகாரத்தான் மிகும் உயிரும்
உடம்படுமெய்பெறா என அறிக.
 

எ-டு:   விளவழகு, சிலவுயிர், நிலாவெழுந்தது, விழியழகிது,தீயெழுந்தது,
கடுவோங்கிற்று, பூவழகிது, ஆடூஉவறிசொல், சேவெழுந்தது, மலையதிர்ந்தது,
கோவெதிர்ந்தான், வௌவிழிந்தது  எனவரும்.   எகர ஒகரங்கள் எவ்வணி,
நொவ்வுற்றான் என இரட்டித்து வரும்.
 

பெரும்பான்மையும் இகர, ஈகார, ஐகார ஈறுகளின்முன் யகரமும் ஏனைய
உயிரீறுகளின் முன் வகரமும், ஏகாரத்தின்முன் மேயினான், மேவினான் என
இரண்டும் வரும். சிறுபான்மை மாயிரு ஞாலம்,  கோயில்   என   ஆகார
ஓகாரங்கள்   யகரமும் பெறும். இவை இயல்பீறு. ‘ஆயிருதிணை’   என்பது
விதியீறு.
 

இனிச்,   சார்வுழி,   செல்வுழி  எனவும் விண்வத்துக்கொட்கும் எனவும்
புள்ளியீற்று  முன்   வந்த   வகரம்   எடுத்தலோசையான்   வந்தவிகாரம்
என்க. வழுவமைதி  எனினுமாம்.  ‘வரையார்’  என்றதனான் உடம்படுமெய்
பெறுதல்    ஒருதலையன்று   எனக்கூறி   மூங்கா அரிது-மூங்கா இல்லை
என்பவற்றை   எடுத்துக்காட்டுவர்   உரையாளர்.  இவை விட்டிசைத்தலின்
புணர்மொழியாகாமை யறிக.
 

புளியங்கோடு,எருவங்குழி,நனியுயர்ந்தான்,சாலவழகிது என இடைச்சொல்,
உரிச்சொற்களின்கண் வந்தன. பிறவும் இவ்வாறே கண்டு கொள்க.
 

சூ. 141:

எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி

இசையிற் றிரிதல் நிலைஇய பண்பே

(39)
 
க-து :

இனிவரும்  சிறப்பியல்களுள்  வேற்றுமை உருபு புணரும் புணர்ச்சி
இலக்கணத்தை      உருபியலின்      கண்ணும்    வேற்றுமைப்
பொருட்புணர்ச்சி    இலக்கணத்தை     மற்ற    இயல்களுள்ளும்
வகுத்துக்கூறுவார்   ஆசிரியர்.  அவ்வழி    உருபுவிரிந்து நிற்கும்
புணர்மொழிகளின்    பொருள்   திரிபுபடாது   நிற்கும்.   உருபு
தொக்குவரும்    பொருட்புணர்ச்சி   இடத்திற்கேற்பப்   பொருள்
வேறுபட்டு வருமாறும்,