இனி இவ்வியலுள், ‘‘வல்லெழுத்து மிகுதல் சொல்லிய முறையான்’’(சூ-14) ‘‘வேற்றுமை யல்வழி’’ (சூ-16) ‘‘சொல்லிய மருங்கின்’’ (சூ-17) ‘‘உகரமொடு புணரும் புள்ளி யிறுதி’’ (சூ-21) ‘‘உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்’’ (சூ-22) ‘‘உளவெனப்பட்ட ஒன்பதிற் றெழுத்தே’’ (சூ-28) என்றாற் போலவரும் சூத்திரங்கள் முற்கூறியவற்றை நினைவுபடுத்தும் முறையில் அமைந்துள்ளமையான், இஃது இறுதி இயலாக அமைந்திருத்தல் வேண்டும். சொல்லதிகாரத்துள் நால்வகைச் சொற்களின் இயல்பு கூறியபின் எச்சவியலும், பொருளதிகாரத்துள் களவியல், கற்பியல்களின் பின் பொருளியலும் அமைந்துள்ளமை இதற்குச் சான்றாகும். | மேலும் சாரியைகள் இடைச்சொற்களாதலின், அவற்றின் புணர்ச்சி இயல்புகளைப் புணரியலுள் கூறியுள்ளமையான், வேற்றுமை உருபுகளும் இடைச்சொல்லாகலின் உருபியல் அதனையடுத்து அமைதலே முறைமையாகும். எனினும் உரையாசிரியன்மார் இதனை ஐந்தாவதாகவே வைத்து உரை கூறியுள்ளமையான், அம்முறைமையை மாற்றாமல் ஈண்டு மேற்கொள்ளப்பட்டதென்க. | சூ. 143 : | கசதப முதலிய மொழிமேற் றோன்றும் | | மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் | | ஙஞநம என்னும் ஒற்றா கும்மே | | அன்ன மரபின் மொழிவயி னான | (1) | க-து : | உயிர் மயங்கியல் புள்ளி மயங்கியல்களுள் (சூ. 28, 301, 315) மெல்லெழுத்துமிகும் எனப் பொதுப்படக் கூறியதனை ஈண்டு நியமிக்கின்றது. | பொருள் :உயிரீறும் புள்ளியீறும் நிற்பக் குறித்துவரும் கசதபக்களை முதலாக உடைய மொழிகளின் மேல், தோன்றும் எனப் பொதுவாகக் கூறப்பெற்ற மெல்லெழுத்திலக்கணமாவது, அத்தகைய வரன் முறையினை உடைய மொழிகளின் கண்ணே ஈண்டுச் சொல்லிய முறைமையான் நிரலே ஙஞநம என்னும் ஒற்றாகமிகும். | எ-டு :விளங்கோடு, விளஞ்செதிள், விளந்தோல், விளம்பூ எனவும் வெரிங்குறை, வெரிஞ்செய்கை,வெரிந்தலை, வெரிம்புறம் எனவும் மரங்குறிது, மரஞ்சிறிது, மரந்தீது, மரம்பெரிது எனவும் வரும். இவை அன்னமரபின் மொழிகள். | விளக்குறுமை, விளக்குறைத்தான், மரக்கிளை, மரச்சிறுமை, மரத்துணி, மரப்பட்டை என்றாற் போல்வன அன்னமரபின் |
|
|