எ-டு :விள, பலா, கிளி, குரீ, கடு, பூ, சே, கை, சோ, கௌ, எனவும் வரகு எனவும் நிறுத்தி ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது, அடைந்தது, ஆடிற்று, இனிது, ஈண்டிற்று, உறு, ஊறிற்று,எழுந்தது, ஏய்ந்தது, ஐது, ஒன்றிற்று, ஓங்கிற்று, ஒளவியத்தது-என அல்வழிக் கண்ணும் ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை, அடைவு, ஆட்டம், இருக்கை, ஈட்டம், உணர்வு, ஊற்றம், எச்சம், ஏற்றம், ஐயம், ஒடுக்கம், ஓக்கம், ஒளவியம் என வேற்றுமைக்கண்ணும் வரும் சொற்களைப் பொருள் பொருந்தப்புணர்த்தி உயிரீற்றின் முன்னும் குற்றியலுகரத்தின் முன்னும் இயல்பாதலைக் கண்டு கொள்க. |
இனிப், புள்ளியீறுகளை உரிஞ், வெரிந், மண், பொன், வேய்,சுடர், கடல், தெவ், யாழ்,உதள் என நிறுத்தி ஞான்றது,நீண்டது முதலியவாக மேற்காட்டிய பதினேழு சொற்களையும் இருவழியிலும் பொருள்பொருந்தப் புணர்த்தி இயல்பாதலைக் கண்டு கொள்க. இங்ஙனம் வினைச்சொற்களின் முன்னும் ஒப்பனவற்றைக் கூட்டி இயல்பாதலைக் கண்டு கொள்க. |