எங்ஙனம் பொருந்தும்? மற்றும் அம்முறை இரண்டும் “உரியவை உளவே” என்பதனான் பாம்பு கோட்பட்டான், பாப்புக்கோட்பட்டான் எனவரும் உறழ்ச்சியுள் நிலைமொழி ஒற்றுத் திரிதலும் கொள்க என்பார். இவை குற்றியலுகரப் புணர்ச்சி யாகலான் மென்றொடராய வழி இயல்பாதலும் வன்றொடராய வழி மிகுதலும் அவ்வீற்று இலக்கணமாம். அவற்றை ஈண்டு அமைப்பது இயைபுடைத்தன்றென்க. |
சூ. 157 : | மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் |
| வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் |
| இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் |
| உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும் |
| சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலும் |
| சாரியை இயற்கை உறழத் தோன்றலும் |
| உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் |
| அஃறிணை விரவுப்பெயர்க் கவ்வியல் நிலையலும் |
| மெய்பிறி தாகிடத்து இயற்கை யாதலும் |
| அன்ன பிறவும் தன்னியல் மருங்கின் |
| மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும் |
| ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப |
(15) |
க-து : | அகத்தோத்தினுள் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கு ஓதிய விதிகளினின்று இரண்டாம் வேற்றுமை எய்தும் திரிபுகளைத் தொகுத்துக் கூறுகின்றது. |
பொருளும் விளக்கமும் : |
1) மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் = மெல்லெழுத்து மிக வேண்டுமிடத்து வல்லெழுத்துத் தோன்றி வருதலும். எ-டு: விளங்கோடு (உயிர்-217) என வருவது, விளக்குறைத்தான் எனவருதலும் |
2) வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் = வல்லெழுத்து மிக வேண்டுமிடத்து மெல்லெழுத்துத் தோன்றி வருதலும். எ-டு:மரக்குறை எனவருவது, மரங்குறைத்தான் என வருதலும் |
3) இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் = திரிபின்றி இயல்பாக வேண்டுமிடத்து மிக்குத்தோன்றி வருதலும். எ-டு:தாய் பகை எனவருவது, தாய்ப்பகைத்தான் என வருதலும் |