நூன்மரபு190

10) மெய்பிறிதாகிடத்து    இயற்கையாதலும்   =    மெய்பிறிதாதலாகிய
திரிபு பெற்று வரவேண்டுமிடத்துத் திரியாமல் இயல்பாக  வருதலும். எ-டு:
மட்பகை, பொற்பகை என ஏனைய வேற்றுமையிடத்துத் திரிபவை இதன்கண்
மண்கொணர்ந்தான், பொன்பெற்றான் என வருதலும்
 

அன்னபிறவும்  =  அவைபோல்வன  பிறவும் திரிந்து வருதலும். எ-டு:
எற்கண்டு,நப்புணர்ந்தான் எனத்தொடக்கங்குறுகும் பெயர்கள் உருபொழிந்து
திரிந்தும், தினை பிளந்தான், கணை  தொடுத்தான்,   மயிர்   குறைத்தான்
என்பவை    உறழாது     இயல்பாய்     வருதலும்,     பிறவாறுவரினும்
கவர்பொருள்படாமல் வருதலும்,
 

தன்னியல் மருங்கின்  மெய்பெறக்கிளந்து   பொருள்வரைந்  திசைக்கும்
ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப =தான் நிலை மொழியொடு பொருந்த
நடக்குமிடத்து வினையும் வினைக்குறிப்புமாகிய  தனது பொருளைக்கிளந்து,
நிலைமொழிப் பொருளை  வரையறை    செய்து  இசைக்கும்   இரண்டாம்
வேற்றுமையினது திரிபெனக் கூறுவர் புலவர்.
 

‘‘தோன்றலும் நிலையலும் ஆதலும்   அன்னபிறவும்  ஐகாரவேற்றுமைத்
திரிபென மொழிப’’ என முடித்துக் கொள்க.
 

இரண்டாம்   வேற்றுமைத்    திரிபினைப்   பிற்கூறியதனான் ஏழாவது
வினையொடு   முடியும்   வழிச் சிறுபான்மை வரைபாய் வருடை, புலம்புக்
கனனே புல்லணற்காளை   என  இயல்பாக   வருதலும்  சாரியை பெறாது
வருதலும் கொள்க.
 

சூ. 158 :

வேற்றுமை யல்வழி இஐ என்னும்

ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய

அவைதாம்,

இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்

உறழ்பா குநவும் என்மனார் புலவர்

(16)
 
க-து :

இகர ஐகார ஈற்று அஃறிணைப் பெயர்களின் அல்வழிப் புணர்ச்சி
கூறுகின்றது.   இகர   ஈற்று   உயர்திணைப்  பெயர் மேற்கூறப்
பெற்றமையான்   இச்சூத்திரம்    அஃறிணைப்  பெயர் பற்றியது
என்பது பெறப்படும்.
 

பொருள்:வேற்றுமைவழியல்லாத அல்வழிப்புணர்ச்சிக்கண் இகர  ஐகார
ஈற்றுப்   பெயர்கள்,   மூவகை முடிபு நிலைமையை உடைய. அவையாவன
வல்லெழுத்துவரின்   இயல்பாவனவும்   மிகுவனவும்  உறழ்வனவும் என்று
கூறுவர் புலவர்.