வருமிடத்தும் கெடும் என்பதும், நெடியதன் முன்னிற்கும் யகரப் புள்ளி சிறுபான்மை வருமொழி யகரத்தின் முன் கெடும் என்பதும், அவ்வழித் ‘‘தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல’’ என்பதனால் தொடர் மொழியீற்றுப் புள்ளிகளும் இவ்விதியை ஏற்கும் என்பதும், இரட்டுதல் வருமொழி முதல் உயிர் எழுத்து வருமிடத்து என்பதுமாகிய இவ்விதிகள் எல்லாம் முன்னும் பின்னும் உள்ள இலக்கணங்களான் அறிய நிற்றலின் ‘‘அறியத் தோன்றிய நெறியியல்’’ என்றார். | எ-டு:1. கோறீது, வாடீது எனவும் கோனன்று, வாணன்று எனவும் தேனன்று, நாணன்று எனவும், தாநல்லர், நோயாது எனவும் வரும். இவை நெடில்முன் ஒற்றாய் நின்று கெட்டன. வரறீது, பொருடீது, வரனன்று, பொருணன்று, கலனன்று, பரணன்று எனவரும் தொடர் மொழிகள் நெட்டெழுத்தியல்பினவாய் நிற்க அவற்றின்கண் கெட்டன. ‘‘அறியத்தோன்றிய’’ என்றதனான் மேற்றிசை, வாட்டடங்கண், குறட்டுறை எனச் சிறுபான்மை கெடாது வருதலும் ஆம். | 2) மண்ணினிது, மண்ணழகு, பொன்னகல், பொன்னழகு, நும்மரசன், நெய்யகல், சொல்லினது, தெவ்வலன்,புள்ளெழுந்தது எனவருமிவை இரட்டின. பிறவும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. | (ஒருமொழிப் புணர்ச்சியாய சொல்லாக்கத்தின்கண் இந்நியதியின்றி வருமாதலின் அவைபற்றி மயங்கற்க) | சூ. 161 : | ஆறன் உருபினும் நான்க னுருபினும் | | கூறிய குற்றொற் றிரட்ட லில்லை | | ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும் | | நெடுமுதல் குறுகும் மொழிமுன் னான | (19) | க-து : | நெடுமுதல் குறுகும் மொழிகட்கு எய்தியது ஒருமருங்கு விலக்கி எய்தாதது எய்துவிக்கின்றது. | பொருள்: நெட்டெழுத்தாகிய முதல் எழுத்துக்குறுகி வரும் எனப்பட்ட மொழிகளின் முன்னர் வந்த ஆறாவதன் உருபின் கண்ணும், நான்காவதன் உருபின் கண்ணும், மேல் இரட்டுமெனக் கூறிய குற்றொற்று இரட்டுதல் இல்லை. மற்று, அந்நிலைமொழி யீற்றின்கண்நிற்கும் ஒற்று ஓர் அகர எழுத்தைப் பெற்று நிற்கும். | எ-டு:எனது, நினது, தனது, எமது, நமது, தமது எனவும் எனக்கு, நினக்கு, தனக்கு, எமக்கு, நமக்கு, தமக்கு எனவும் |
|
|