நூன்மரபு196

இவற்றுக்கு உம்மை விரித்துப் பொருள்  கொள்க.  கலவரை,  செவிட்டரை
என்பவற்றின் நிலைமொழித் திரிபை ஈண்டுப்  ‘‘புரைவதன்று’’  என்பதனை
மிகையாக்கி   அதனான்  முடிப்பார்   உரையாளர்.  அவை (புள்ளிமய-24,
குற்றுகரப்புண-20) அகத்தோத்தின்   விதிப்படி   முடிவனவாகலின்  ஈண்டு
அடக்குதல் வேண்டா என்க.
 

சூ. 166 :

குறையென் கிளவி முன்வரு காலை

நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை

(24)
 
க-து :

குறை என்னும் சொல்வரின் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் :குறை    என்னும்  அளவுப்  பெயர் மேற்கூறிய அளவைப்
பெயர்களின்முன்    வருமிடத்து,    வேற்றுமைப்   புணர்ச்சிக்குக்  கூறிய
இலக்கணத்தைப் பெற்றுச் சாரியை இல்லாத குறை தோன்றாமல்    நிறைவு
பெறத் தோன்றும்.
 

எ-டு:உரிக்குறை, தொடிக்குறை, காணிக்குறை, கொட்குறை,  காற்குறை
எனவரும். இவற்றையும் உம்மை  விரித்துக்    கொள்க.  குறை  என்பதன்
பொருட்டாய்   வரும்    கூறு  என்பதற்கும் இவ்விதி ஒக்கும்.  உரிக்கூறு
எனவரும்.
 

சூ. 167 :

குற்றிய லுகரக்கு இன்னே சாரியை

(25)
 
க-து:

குற்றியலுகர    ஈற்று    அளவைப்    பெயர்க்குச்   சிறப்புவிதி
கூறுகின்றது.
 

பொருள் :குற்றியலுகர  ஈற்று    அளவைப்  பெயர்களின்முன் குறை
என்பது புணருமிடத்து ‘இன்’ சாரியை பெறும்.
 

எ-டு:உழக்கின்குறை, ஆழாக்கின்குறை, கஃசின்குறை,  கழஞ்சின்குறை,
ஒன்றின்குறை, பத்தின்குறை எனவும் உழக்கின்கூறு,ஆழாக்கின்கூறு எனவும்
வரும்.  (உழக்கின்குறை = உழக்கும்     குறையும்    என்பது   பொருள்)
குற்றியலுகரக்கு என்பது செய்யுள் விகாரம். ஏகாரம் இசைநிறை.
 

சூ. 168 :

அத்திடை வரூஉம் கலமென் அளவே

(26)
 
க-து :

கலம் என்னும் அளவுப் பெயருக்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் :கலமென்னும்  அளவுப் பெயர் குறை என்னும் சொல்லொடு
புணருங்கால் அத்துச் சாரியை இடையே வரும்.
 

எ-டு:கலத்துக்குறை. (கலமும் குறையும் என்பது பொருள்)