நூன்மரபு203

பொருள்:சுட்டெழுத்தினை முதலாக உடைய ஐகார ஈற்றுச் சொல்லின்
இறுதி, உருபு வருங்கால் வற்றென்னும் சாரியையொடும் பொருந்தி நிற்றற்கு
உரித்தாகும்.
 

எ-டு:அவையற்றை,   இவையற்றை,   உவையற்றை  எனவரும். பிற
உருபுகளொடும் ஒட்டிக் கொள்க.   வற்றினது   வகரக்கேடு   புணரியலுட்
கூறப்பட்டது. வகரமெய் கெட்டவிடத்து யகரம் உடம்படு மெய்யாக வந்தது.
 

‘நிற்றலும்’ என்னும்  உம்மையை  வற்றொடும் எனக் கூட்டுக. அதனான்
பிறவற்றொடும்    நிற்றற்குரித்தெனக்   கொள்க.   எ-டு:   அவைதம்மை,
அவைதம்மொடு   எனத்   தம்முச்சாரியையொடு   வரும்.    சிறுபான்மை
வற்றொடு இன் சாரியை ஒருங்கு பெறுதலும் கொள்க. எ-டு: அவையற்றிற்கு
எனவரும்.
 

சூ. 178 :

யாவென் வினாவின் ஐயென் இறுதியும்

ஆயியல் திரியாது என்மனார் புலவர்

ஆவயின் வகரம் ஐயொடுங் கெடுமே

(6)
 
க-து :

யாவை    என்னும்  வினாப் பெயருக்கு அவ்விதியை மாட்டேற்றி
அதனொடு நிலைமொழித் திரிபும் கூறுகின்றது.
 

பொருள் :யா என்னும் வினாவை  முதலாக உடைய யாவை என்னும்
சொல்லின் ஐகார    இறுதியும்  மேற்கூறிய இலக்கணத்திற்றிரியாது  எனக்
கூறுவர்   புலவர்.     அவ்வழி   நிலைமொழி   வகரமெய் ஐகாரத்தொடு
ஒருங்குகெடும்.
 

எ-டு:யாவற்றை, யாவற்றொடு எனவும் யாவற்றிற்கு எனவும் வரும். பிற
உருபுகளொடும் ஒட்டிக் கொள்க.
 

சூ. 179 :

நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும்

ஆவயின் னகரம் ஒற்றா கும்மே

(7)
 
க-து :

நீயென்னும்   ஓரெழுத்தொருமொழியொடு   உருபு   புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள் :நீ என்னும் ஓரெழுத்துப் பெயராகிய நெட்டெழுத்துத் தனது
மாத்திரை   குறுகி    நிற்கும்.   அவ்விடத்து ஒரு னகரப் புள்ளி தோன்றி
நிற்கும்.
 

மொழிக்கு அடிப்படையாகலின் எழுத்தினை முதல் என்றார். நீ என்னும்
முதனிலைத் தொழிலை நீக்க ஒருபெயர் என்றார்.ஆகும் என்பது தோன்றும்
என்னும் பொருட்டாய் நின்றது.