பொருள் :அழன் புழன் என்னும் அவ்இரண்டு மொழிக்கும் உருபு வருங்கால் அத்துச்சாரியையும் இன்சாரியையும் உறழ்ந்து தோன்றுதல் மரபு என்பார் அச்சொற்களின் நிலையை உணர்வோர். |
இவை மகர ஈற்றுச் சொல்லாகத் தோன்றி னகர ஈறாகத் திரிந்து வழங்குவன என்பதை உணர்த்த ‘உணருமோர்’ என்றார். ‘ஒத்தது’ என்பதனை “ஒத்தறிவான் உயிர் வாழ்வான்” (குறள்-214) என்பது போலக் கொள்க. |
எ.டு :அழத்தை, அழனினை எனவும் புழத்தை, புழனினை எனவும் வரும். ஏனைய உருபுகளொடும் ஒட்டிக்கொள்க. அத்தே வற்றே (புணரியல்-31) என்பதனான் நிலை மொழியீறும் அத்தினகரம் (புணரி-23) என்பதனான், அத்தின் அகரமும் கெட்டன என்க. இன்னினும் அத்துவருதல்-ஒத்ததாகலின் அதனை முற்கூறினார். |
சூ. 194 : | அன்என் சாரியை ஏழன் இறுதி |
| முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப |
(22) |
க - து : | ஏழ் என்னும் சொல் உருபொடு புணருமாறு கூறுகின்றது. |
|
பொருள் :ஏழ் என்னும் எண்ணுப் பெயரிறுதிமுன் உருபு வருங்கால் அன் என்னும் சாரியை தோன்றுதல் இலக்கணமுடையது என்று கூறுவர் புலவர். |
எ. டு :ஏழனை, ஏழனொடு, ஏழற்கு எனவரும். பிறவற்றொடும் ஒட்டிக் கொள்க. |
சூ. 195 : | குற்றிய லுகரத் திறுதி முன்னர் |
| முற்றத் தோன்றும் இன்னென் சாரியை |
(23) |
க - து : | குற்றுகர ஈறுகள் உருபொடுபுணருமாறு கூறுகின்றது. |
|
பொருள் :குற்றியலுகரமாகிய இறுதியின்முன் உருபு வருங்கால் இன் சாரியை முழுமையாகத் தோன்றும். |
எ. டு :நாகினை, நாகினொடு; வரகினை, வரகினொடு; எஃகினை, எஃகினொடு; பாக்கினை, பாக்கினொடு; கன்றினை, கன்றினொடு; தெள்கினை, தெள்கினொடு எனவரும். ஏனைய உருபுகளொடும் ஒட்டிக் கொள்க. |
சூ. 196 : | நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும் |
| அப்பால் மொழிகள் அல்வழி யான |
(24) |
க - து : | மேலதற்கொரு புறனடை கூறுகின்றது. |