நூன்மரபு211

பொருள் : குற்றியலுகர  இறுதி   முன்னர்   இன்சாரியை தோன்றுவது
நெட்டெழுத்துத்தொடர்க் குற்றியலுகரத்தின்பின்  ஒற்றுமிகும்.   (குற்-புண-6)
ஒருசார் மொழிகள் அல்லாத ஏனைய சொற்களிடத்தேயாம்.
 

ஒற்றுமிகத்  தோன்றும்  எழுத்துக்களாவன டகரமும் றகரமுமாம். அவை
இயல்பாக வரும்  என   மேற்கூறுப.  அப்பால்  மொழிகள்  எனப்பன்மை
கூறியவதனான்   டகர  றகரங்களும்  சிறுபான்மை  தகரமும்   தொடர்ந்த
உயிர்த்தொடர்  மொழிகளுள்  சிலவும்  இயல்பாக   வருமெனக்  கொள்க.
எடுத்துக்காட்டு அந்நூற்பாவுரையுள் கண்டு கொள்க.
 

சூ. 197 :

அவைதாம் 

இயற்கைய வாகும் செயற்கைய என்ப 

(25)
 

க-து:

ஒற்றுமிகத்   தோன்றும்   குற்றியலுகர  மொழிகள்  உருபொடு
புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்: மேலே   ஒற்றுமிகத்   தோன்றும்   அப்பால்   மொழிகள்
எனப்பட்டவைதாம்,  இயல்பாகப் புணரும் இலக்கணத்தை உடையன என்று
கூறுவர் புலவர். இயற்கை = இலக்கணம்; செயற்கை = செய்கை-செயற்பாடு.
 

எ. டு:     யாட்டை,      (யாடு + ஐ = யாட்டை)       யாட்டொடு,
சோற்றை-சோற்றொடு;   (முருடு)    முருட்டை,   முருட்டொடு;   (முயிறு)
முயிற்றை, முயிற்றொடு; (எருது) எருத்தை, எருத்தொடு எனவும் வரும்.
 

‘‘செயற்கைய’’ என்ற மிகையான் யாட்டிற்கு,  சோற்றிற்கு,  யாட்டின்கண்,
சோற்றின்கண் எனச் சாரியை பெற்றுவருதலும் கொள்க.
 

சூ. 198 :

எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்
(26)
 

க-து:

குற்றுகர  ஈற்று  எண்ணுப்  பெயர்கள்  உருபொடு  புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்: எண்ணுப்  பெயராக  வரும்  குற்றுகர  ஈறுகள்  உருபொடு
புணருங்கால் அன்சாரியையொடு பொருந்தி வரும்.
 

எ. டு: ஒன்றனை,  இரண்டனை,   மூன்றனை,  நான்கனை,  ஐந்தனை,
ஆறனை,  எட்டனை, ஒன்பஃதனை, பஃதனை, நூறனை எனவரும். ஏனைய
உருபுகளொடும் ஒட்டுக.