xxvii |
தெரிந்து இறுதிநின்ற அகர உயிரும் அஃதேறிய வகர ஒற்றும் கெடுதலும் உரியதாகும் என்று முன்னை உரையாசிரியன்மார் கொண்டனர். கெடுதல் - எழுவாய்; உரித்து - பயனிலை. இறுதிவகரம், கெடுதல் என்ற எழுவாய்க்கு அடை. பயனிலையொடு இயையாமை யாண்டையது? சாவ என்ற சொல் வினையெச்ச வாய்பாடாய் விதியீறாகிய அகரமே. எனவே விதியீறுகளைப் புணர்ப்பதும் ஆசிரியர்க்கு உடன்பாடே.23 |
நூ. 211: வாழிய என்னும் செய்க என்கிளவி என்ற பாடமே ஏற்றது. அதனைத் தொகுத்துச் செய்கென்கிளவி என்று பாடமோதின் செய்கு என் கிளவி என்ற புணர்மொழியாதற் கேற்றலின் செய்க வென் கிளவி என்ற பாடமே கொள்ளத் தக்கது.24 |
நூ.210: உண்ணாத குதிரை வாராதகுதிரை செய்யா என்ற பெயரெச்ச எதிர்மறைவாய்பாட்டினை இவ்வாசிரியர் யாண்டும் (நூ-222, 223 உரை) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகவே கொள்கிறார். தொல்காப்பியத்துள் எந்த இடத்திலும் அஃது அகர ஈற்றதாகக் காணப்படவில்லை. பாட்டு, தொகை என்பனவற்றுள்ளும் அந்நிலையே உள்ளது. ‘‘உளவரை தூக்காத ஒப்புர வாண்மை’’ என்றாற்போலத் திருக்குறளிலேயே அஃது அகர ஈற்று எதிர்மறைப் பெயரெச்சமாகத் தோற்றம் பெறுகிறது. எனவே பண்டுச் செய்யா என்ற ஆகாரஈற்றுச்சொல்லே எதிர்மறைப் பெயரெச்சவாய்பாடு என்று கோடலே ஏற்றது என்பது பெறப்படுகிறது.25 |
நூ.213: பலாஅஞ் சிலாஅம்-உம்மையாற் புணர்ந்தன. ஈண்டைக்குரியன பலாஅ, சிலாஅ என்பன. அவை உம்மையொடு இணைந்தே வருதலின் பலாஅஞ் சிலாஅம் என்றே சுட்டப்பட்டன. ஆசிரியர் எண்ணுப்பெயரை விதந்தோதியே முடிப்பார் ஆதலின், பொது அதிகாரம் மாறியபின் எண்ணுப்பெயர் பற்றிய அதிகாரத்தின்கண் முதல் நூற்பா |
|
23. கெடுதல் வகரத்திற்குரியதாகலின் அதுவே எழுவாயாகக் கொள்ளப்பட்டது. 240ஆம் சூத்திர அமைப்பும் இதற்குச் சான்றாகும். |
24. பாடம் சிதைந்தமைக்கு இவ்வடிவமே காரணமாதல் வேண்டுமென்று கொள்ளப்பட்டது. |
25. ஆகாரம் எதிர்மறையையும் தொக்குநின்ற அகரம் எச்சத்தையும் தரும் எனக்கொள்ளப்பட்டது. புறம் 27, 126; கலி 83, 84 ஆகியவற்றுள் அகரஈறு வந்துள்ளது. |